காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயந்திரரின் ஜாமீன் மனுவையும், ரிமாண்ட் அறிக்கை மற்றும் உத்தரவையும், https://www.lawvsjustice.com/tamil/veeramani/ என்ற பதிவிலும், சங்கரராமனை ஏன் கொலை செய்தேன் என்ற குற்றவாளியின் வாக்குமூலத்தை https://www.lawvsjustice.com/tamil/motiv/ என்ற பதிவிலும் பார்த்தோம்.
அரசு தரப்பின் எதிர்ப்பு மனுவையும், அதற்கு குற்றவாளிகளின் தரப்பில் தாக்கல் செய்யப்பட பதில் உரையும் கீழ்க்கண்டதாகும்,
ஜாமீன் வழக்கில் இவ்வாறாக காவல் துறையினரும், குற்றவாளிகள் தரப்பிலும் மாறி மாறி குற்றச்சாட்டுக்கள் கூறியதோடு மட்டுமல்லாமல், தமிழக காவல் துறையினர் கைது செய்த போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர், என்று கூப்பாடு போட்டு உச்ச நீதிமன்றம் வகுத்த கைது நெறிமுறைகளை தமிழக காவல் துறையினர் பின்பற்றவில்லை என்றெல்லாம் நீதிமன்றத்திலும், மனித உரிமை ஆணையத்திலும் புகார்கள் அளித்து கைது செய்த நடைமுறையை குற்றம் கூறி காவல் துறையை பழி வாங்க முயற்சித்தனர் குற்றவாளிகள்.
சுமார் 12 ஆண்டுகளுக்குப்பின், அந்த கைதின் நேரடி காட்சிகளை இப்போது நாம் ஒளிபரப்புகிறோம்,
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை நம்பிய நீதிமன்றங்களுக்கு நம்பிய நீதிமன்றங்களுக்கு இப்பொழுது நாம் எழுப்பும் கேள்வி,
மனித உரிமை மீறலில் ஈடுபட்டது யார் ? குற்றவாளிகளா போலீசா ?
7 பாகங்கள் கொண்ட இந்த காணொளியை முழுவதுமாக கண்டு விட்டு பதில் கூறுங்கள்.
இந்த காணொளியை குற்றவாளிகளோ, காவல்துறையினரே, நீதிபதிகளோ, ஏன் தமிழக முதலமைச்சர் கூட இன்று வரை கண்டதில்லை.
Leave a Reply