12509429_10208168939639084_4752331173095053218_n

தமிழக தலைமை நீதிபதி சஞ்சய் கவுல்

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி ஒரு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆவதற்கான அடிப்படை தகுதி, குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும்.

1980களில் தமிழகத்தை பொறுத்த வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஆக பணி புரிவதற்கு 99.9 சதவீதம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வந்த ஏதாவது ஒரு சட்டக்கல்லூரியில் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3 ஆண்டுகளோ, 5 ஆண்டுகளோ, சட்டக்கல்லூரிக்கு சென்று வகுப்புகளில் 75 அல்லது 60 சதவீதத்துக்கு மேல் அட்டெண்டன்ஸ்   பெற்று, தேர்வு எழுதி பாஸ் ஆன பிறகு, பார் கவுன்சிலில் பதிவு செய்து, மூத்த வக்கீல் ஒருவரிடம் ஜுனியராக வேலைக்கு சேர சிபாரிசு பிடித்து, அவரிடம் குமாஸ்தா வேலை பார்த்து, அங்க இருக்கும் இதர ஜுனியர்களுடன் முட்டி மோதி சமாளித்து, சுமார் 10 ஆண்டுகள் வெறும் கேஸ் கட்ட தைக்கிறது, ஆபீஸ் டேபிளை துடைக்கறது, சீனியருக்கு காபி, வடை வாங்கி கொண்டு வந்து கொடுக்கறது என்று அலுவலகத்திலும், சேம்பரிலுமே கழிந்து விடும்.

பிறகு, கோர்ட்டு அலுவலகத்தில் டைரி பார்ப்பது, வாய்தா தேதியை குறிப்பது, வழக்கை நம்பர் செய்வது, முக்கியமாக கவனிக்க வேண்டிய ஆண்/பெண் கோர்ட்டு ஊழியர்களை கவனிப்பது, போன்று படிப்படியாக பிரமோஷன் வழங்குவர் நமக்குன்னா வாச்ச சீனியர் வக்கீல். அது வரைக்கும் டீ செலவுக்கும், கை செலவுக்கும் தான் காசு கொடுப்பாரு. வேலை எதுவும் கத்துக்கொடுக்க மாட்டார், ஏன்னா, நாம் அவரை மிஞ்சி விடுவோம் என்ற பயம்.

இந்த 10 ஆண்டுகளில் வக்கீல் ஆபீஸ் குமாஸ்தா தான் குருநாதர். வழக்காடி கிட்ட எப்படி பீஸ் கறக்கறது முதற்கொண்டு, போலி கையெழுத்து போடறது எப்படி, யாருக்கும் தெரியாம வழக்கு கோப்பை நீதிமன்ற அலுவலகத்தில் இருந்து சுடுவது எப்படி, போன்ற அனைத்து தொழில் ரகசியங்களையும் அவரே கற்றுக்கொடுப்பார். அது மட்டுமல்ல, சீனியரின் தொழில் ரகசியங்களையும், அந்தரங்க மர்மங்களையும் குமாஸ்தாக்களே அறிந்து இருப்பர்.

இதையெல்லாம் சகித்துக்கொண்டு வெற்றிகரமா ஒரு 40, 45 வயசில, வழக்கு நடத்த கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆகும் தன்னிம்பிக்கை வந்த பிறகு, அந்த சீனியர் ஒரு வேளை நீதிபதி ஆனால், ஜுனியருக்கு ஜாக்பாட் அடிக்கும். (60 வயதிலும் ஜுனியராகவே பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது) .

அந்த நீதிபதி (நம்ம முன்னாள் சீனியர்) கிட்ட, நாம ஆஜர் ஆனா மட்டும் தடை உத்தரவு கிடைக்கும்னு, ஊர்ல இருக்கற அத்தனை வக்கீலும் நம்மை வந்து சந்திப்பார்கள், கவனிப்பார்கள். பார்க்கும் போதெல்லாம் 5 நிமிசத்துக்கு ஒரு முறை வணக்கம் வைப்பார்கள். ரெண்டே வருஷத்திலே, சென்னையில ஒரு வீடு கட்டி, வாழ்க்கையில செட்டில் ஆயிரலாம்.

ஒரு சில நீதிபதிகள் தங்கள் அலுவலகத்தை தொடந்து நீதிபதி ஆன பிறகும், தங்கள் ஜுனியர்களை வைத்து நடத்தி வருவார்கள். ரொம்ப விசுவாசமா இருந்தா, நம்ம சீனியர் ஓய்வு பெறுவதுற்குள், நம்மை ஜட்ஜ் ஆக்குவாரு, நாமளும் கோடிகளில் புரளலாம், கிளப்புகளுக்கு செல்லலாம், கோடம்பாக்கத்தை ECRக்கு மாத்தலாம். இந்த மாதிரி அரசியல் சாசனத்தில் சொல்லப்படாத பல சலுகைகளை அனுபவிக்கலாம். ஆனால், 1000 வக்கீல்களில் ஒருவர் தான் நீதிபதி ஆக முடியும். இருப்பினும் அந்த ஒற்றை நீதிபதியின் அனைத்து நண்பர்களும், ஒரு 4, 5 ஆண்டுகளில் செட்டில் ஆகி விடுவார்கள்.

நீதிபதி ஆவோரின் பின்னணியை ஆராய ஒரே ஒரு வழிமுறை தான் இருந்தது. அதாவது சிபாரிசின் அடிப்படையில் ஒருவரை நீதிபதி பதவி ஏற்கும் முன் அவரின் குற்றப்பின்னணியையும், இதர பின்னணியையும் மத்திய அரசின் உள்நாட்டு உளவுத்துறையான IB என்னும் இன்டெலிஜென்ஸ் பீரோவிடம் இருந்து அறிக்கை பெறப்படும்.

முன்னொரு காலத்தில் கெடுபிடியாக இருந்த உளவுத்துறை தற்போது பாஸ்போர்ட் விசாரணைக்கு வரும் ஏட்டய்யா போல, தலையை சொரிந்து, எதோ குடுக்கறதா குடுங்க  ஜட்ஜய்யா என்ற நிலைக்கு வந்து விட்டது.

1980களில் என்ன நடந்ததென்றால் ஒரு சில குமாஸ்தாக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜுனியர்கள் போல கோட்டு, கவுனு என மாட்டிக்கொண்டு வக்கீல் தொழில் பாக்க ஆரம்பித்தனர். வெளி மாநிங்களில் படித்தாக போலி சான்றிதழ்களை தயார் செய்து, பார் கவுன்சிலில் பதிவு பெற்றனர்.

இந்த சூழலில், தனபாலன் என்ற ஒரு நபர் மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறையில் தட்டச்சராக 1976ம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்தார்.

maxresdefault

TYPIST TURNED HIGH COURT JUDGE Mr.DHANABALAN

ஒரு கசமுசா விவகாரத்தில் நீதித்துறையிடம் படியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வக்கீல்களுடன் ஏற்பட்ட தொடர்புகளுடன் இணைந்து போலி வக்கீலாக ஒரு சைடு தொடங்கினார். கோர்ட்டு நேரத்தில் தொலை தொடர்புத்துறையில் தட்டச்சர் வேலை பார்த்துக்கொண்டு, மாலை நேரங்களில் மோசடி வக்கீல் தொழிலை பார்க்க துவங்கினார்.

11665596_838196029567441_429039664803102305_n

கூடவே அந்த கசமுசாவும் இணைந்து வருமானம் கொழிக்க, சைடு பிசினெஸை மெயின் பிசினஸ் ஆக மாற்ற முடிவெடுத்து 1988ம் ஆண்டு தட்டச்சர் பணியை ராஜினாமா செய்தார்.

10419468_838196002900777_5469972502765789796_n

பிறகு கசமுசாவின் தயவில் பிடிக்க வேண்டியவர்களை பிடித்து, கொடுக்க வேண்டியதையும் கொடுத்து, தன பெயரை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்ய வைத்து, நியமனம் பெற்றார். உளவுத்துறையில் பிடிக்க வேண்டியவர்களை பிடித்து, தன்னுடைய போலி சட்டப்படிப்பு சான்றிதழ்கள், டைப்பிஸ்டு வேலை பார்த்த சமாச்சாரம், மற்றும்  கில்மாவின் பரிந்துரை, ஆகியவற்றை மறைத்து உளவுத்துறையிடம் தனக்கு சாதகமான அறிக்கையை அனுப்பி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2005ம் ஆண்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

qazxswedc

உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனால் மட்டும் அமைச்சர்களை போல பல்லாயிரம் கோடிகளோ, பல நூறு கோடிகளோ சம்பாதித்து விட முடியாது. முதலில் அதற்கேற்ற தரகர்களை நியமிக்க வேண்டும். இரண்டாவதாக வளமான துறை நமக்கு ஒதுக்கப்பட வேண்டும். துறை ஒதுக்குவது என்பது, முழுக்க முழுக்க தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அவர் விருப்பம் போல ஒதுக்கலாம், அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

பொதுவாக ஒரிஜினல் சைடு என்னும் சென்னை மாநகரில் இருக்கும் சொத்துக்கள் குறித்த வழக்குகளில் தான் சத்தமின்றி சம்பாதிக்க முடியும் என்றாலும், அரசுத்துறைகள் சம்பந்தப்பட்ட கல்வி, கனிமவள போன்ற துறைகளில் பெரும் பணப்புழக்கம் இருக்கும்.  இதற்கு கடும்  போட்டா  போட்டியும் உண்டு.

நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்ந்து கொள்ளையடிப்பதற்கு எப்படி துறை தேவையோ, அதே போல நீதித்துறை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்படும் நீதிபதிகள் குழுக்களால் நிர்வாகம் செய்யப்படும். அந்த குழுக்களில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவும். அந்த குழுக்களையும் தலைமை நீதிபதியே நியமிப்பார். அது மட்டுமல்லாமல், அமைச்சர்கள் போல மாவட்டத்துக்கு என்று ஒரு நீதிபதி கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள். இந்த மாவட்ட தலைவர்களையும்,  தலைமை நீதிபதியே நியமிப்பார்.

இவ்வாறு தலைமை நீதிபதியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரை தொடர்ந்து கவனித்து வந்தால், வளமான துறைகள், வளம் கொழிக்கும் கமிட்டிகள் மற்றும் வளமான மாவட்டம் கிடைக்கும் .

கேஸ் கட்டை திறந்து 4 வரி ஒழுங்கா படிக்க தெரியாத தனபாலன, 2005ம் ஆண்டு முதல், ஓய்வு பெற்ற 2015 ம் ஆண்டு வரை மிக முக்கிய இலாக்காவான, கல்வி, கனிம வளம், பொது இலாகா ஆகியவற்றை ஒன்றாக பெற்று கலக்கி வந்தார். தற்குரியான தன் மகனுக்காக பெங்களூரில் உள்ள எதோ ஒரு டுபாக்கூர் கல்லூரியில் தன்னைப்போலவே சட்டப்படிப்பு சான்றிதழ் பெற்று அவனை வக்கீல் என்று தனது நீதிமன்றத்திலேயே வழக்குகளை தாக்கல் செய்து புகுந்து விளையாடினார். ஒரு தடை உத்தரவுக்கு 25,000/- வக்கீல் பீஸாக வாங்கிய மகன், சில மாதங்களில் குறைந்தது 20 லட்சம் ருபாய் கொண்டு வந்தால் தான், சந்திக்க ஆப்பாயிண்ட் மெண்ட்டே கிடைக்கும் என்று 2 ஆண்டுகளில் வளர்ந்தான். என் மகனைப்போல ஜுனியர் வக்கீல்கள் வளர வேண்டும் என்று இதர ஜுனியர் வக்கீல்களை கலாய்த்த தனபாலன், ஜுனியர் வக்கீல்களை கண்டால் கிண்டலடிப்பதையே வாடிக்கையாகி வைத்திருந்தான்.

ஒரு கால கட்டத்தில் அரசியல் செல்வாக்கை வளர்க்க, தன் மகன் திருமணத்துக்கு கோடி கோடியாய்  அள்ளி வீசி, திமுக அதிமுக இருபுறமும் செல்வாக்கை வளர்த்தார். இருப்பினும் அந்த திருமணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் உச்சநீதிமன்றம் வரை எடுத்துச்செல்லப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருக்கு பிறந்த குழந்தையும் நீதித்துறையின் உதவியுடன்  ஏமாற்றப்பட்டனர். (இது குறித்து விரிவாக வேறொரு பதிவில் காணலாம்).

Justice-Dhanabalan kalaigar

இப்படியாக 2005 ம் ஆண்டு தொடங்கி 2015 வரை ஓடிய பயணத்தில், சக நீதிபதி கர்ணன் ரூபத்தில் சிக்கல் வந்தது. தொடர்ச்சியாக, தனக்கு உபயோகமே இல்லாத இலாக்காக்களை  அளித்த வந்த தலைமை நீதிபதியை கண்டித்து வந்த கர்ணன், ஒரு மனிதாபிமுள்ள நீதிபதி.

பணம் கொடுத்தால் தான் உத்தரவு வழங்குவேன் என்று பெரும்பாலான நீதிபதிகளின் மத்தியில், கொடுக்கவில்லையென்றாலும், தன்னிடம் ஒருவன் வந்து விட்டால், அவனுக்கு ஏற்றவாறு எதோ ஒரு உத்தரவை வழங்கி திருப்திப்படுத்தும் நீதிபதி. இதற்கு பல உதாரணங்கள் உண்டு. இது பெரும்பாலான வக்கீல்களுக்கு தெரிந்த செய்தி என்றாலும், கர்ணனை பாராட்டி விட்டால், பார்ப்பன கூட்டணியை சேர்ந்த இதர நீதிபதிகள் கோபித்துக்கொண்டு உத்தரவுகள் வழங்க மாட்டார்கள் என்று கர்ணனின் நல்ல குணங்களை பற்றி மூச்சு விட மாட்டார்கள்.

இந்த சூழலில், தான் 165 கீழ் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் பணம் புகுந்து விளையாடுகிறது என்று கண்டறிந்த கர்ணன், தாமாக முன் வந்து ஒரு வழக்கை பதிவு செய்து, 2015ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் 30 ம் தேதி வரை நடைபெறவிருந்த நீதிபதிகள் தேர்வு நேர்காணலுக்கு  தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கை 30 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த முறைகேட்டில் தனபாலனுக்கும் இதர 2 நீதிபதிகளான சுதாகர் மற்றும் அரிபரந்தாமனுக்கும் இருக்கும் தொடர்பு குறித்தும் தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். குழுவில் மீதமிருந்த 2 நீதிபதிகள் நாரதர் கிருபாகரனும், டபுள் தீர்ப்பு மாலாவும்.

என்ன தான் போலி ஆவணங்களின் மூலம் நீதிபதி ஆனாலும், ஒரு டைப்பிஸ்டான தனபாலன், தன் டைப்பிஸ்ட் பதவிக்கு மேலான கீழ்க்கோர்ட்டு நீதிபதி பதவிக்கு நடக்கும் தேர்வுக்குழுவில் தேர்வாளராக இடம் பெற கூடாது என்பது கர்ணனின் வாதம்.

1-16.4.15

2-16.4.15-2

3-16.4.15

4-2

இந்த உத்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தலைமை நீதிபதி சஞ்சய் கவுல், மறுநாளே தன் நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி, கர்ணனின் இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை உருவாக்கி, அதில் தாமாக முன் வந்து மேல் முறையீடு வழக்கு ஒன்றினை பதிவு செய்து, நீதிபதிகள் சி.டி.செல்வம், தமிழ்வாணன் மூலம் கர்ணனின் தடை உத்தரவுக்கு தடை பெற்றார். (கவுலுக்கும் இவர்களுக்கும் இருக்கும் உறவை, தனியொரு பதிவில் வெளியிடுகிறேன்).

வாய்தா தேதியான ஏப்ரல் 30ம் தேதி வழக்கை கர்ணன் முன் பட்டியலிடாமல் பார்த்துக்கொண்டார் கவுல். தன்னுடைய நீதிமன்ற விவகாரங்களில் தலையிடும்  தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வேன் என்று எச்சரித்து ஒரு எழுத்துப்பூர்வ உத்தரவை இட்டார் கர்ணன். இதற்கிடையில் மே மாதம் முழுக்க கோடை  விடுமுறை என்பதாலும், மே இறுதியில் தனபாலன் ஓய்வு பெறுவதாலும், சிபிஐ தனபாலனின் கல்வி சான்றிதழ்களை விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

நீதிபதி நியமன முறைகேடு குறித்து தான் சுயமாக முன் வந்து பதிந்த வழக்கை தன் முன் பட்டியலிடுவதை தடுத்து நிறுத்திய தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு தொடருவேன் அன்று கர்ணன் கூறிய உத்தரவை எதிர்த்து, தலைமை நீதிபதி கவுல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

கர்ணனை பழி வாங்குவதற்காக, கர்ணன் மீது ஏதோ குற்றச்சாட்டுக்களை கூறி, அவரை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார் கவுல்.

இந்த செய்தியை அறிந்த கர்ணன், கவுலுக்கு எழுத்துப்பூர்வ சவால் ஒன்றை விடுத்தார். என் மீது எந்த குற்றச்சாட்டு இருந்தாலும் தெரிவியுங்கள், பொது வெளியில் வைத்து என்னை விசாரியுங்கள், என் முழு ஒத்துழைப்பை தருகிறேன். ஆனால், நான் தனபாலனின் மேல் 3 ஆண்டுகளாக பல முறை புகார் கொடுத்தும் அதை விசாரிக்க ஏன் மறுக்கிறீர்கள் என்ற கேட்டு கடிதம் எழுதினார்.

11262487_1070284426332433_5724084083627002399_n

ru

இதற்கிடையில் மே 30ம் தேதி ஓய்வு பெற்ற தனபாலன், பிரிவு உபச்சார விழாவில், நீதித்துறைக்கு ஆபத்து வெளியில் இருந்து வருவதில்லை, அது உள்ளேயே இருக்கிறது என்று கர்ணனை ஜாடை பேசினார். இதற்கு பதிலளித்த கர்ணன், தனபாலனுக்கு ஒரு கடிதம் எழுதி, இப்போது ஓய்வில் இருப்பதால் தன்னுடைய கல்வி சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு சிபிஐயிடம் ஆஜர் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

2.6.15

2.6.15 2

அறிவுறுத்திய கையோடு பிரதமருக்கும், முதல்வருக்கும் கடிதம் எழுதிய கர்ணன், போலி சான்றிதழ் விவகாரம் 3 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் தனபாலனுக்கு எந்த அரசு பதவியும் தரக்கூடாது என்று கடிதம் எழுதினார். 6 - 25.6.15

post retirement

இவ்வாறாக நடந்த இந்த யுத்தத்தில், கர்ணனை வெற்றிகரமாக பணியிட மாற்றம் செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றிய கவுல், தனபாலனோடு எவ்வாறு உறவு வைத்திருந்தார் என்பது தான் மிக முக்கியம். போலி சான்றிதழ்  குற்றச்சாட்டுக்கு ஆளான தனபாலன் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளாத தலைமை நீதிபதி சஞ்சய் கவுல், தனபாலன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பதாக கூறி, அதன் விற்பனையை விளம்பரப்படுத்துவதற்காகவும், செல்வாக்கை வளர்த்துக்கொடுப்பதற்காகவும், மாநில கவர்னரை வைத்து விழா எடுத்ததோடு மட்டுமல்லாமல், தில்லிக்கு அழைத்து சென்று, ஜனாதிபதியிடம் அறிமுகப்படுத்தி விழா நடத்தி, அவர்களையும் ஏமாற்றினார்.

300515

11377160_980121672019835_5093797153603426717_n

ஆனால் கர்ணனோ, கவுலை பாராளுமன்றத்துக்கு வாருங்கள், நம் இருவரும், ஒருவர் மீது இன்னொருவர் கூறும் குற்றச்சாட்டை மக்கள் சார்பாக பாராளுமன்றம் விசாரிக்கட்டும் என எழுத்துப்பூர்வமாக அழைத்தும், வர மறுத்து விட்டார் சஞ்சய் கவுல்.

21.8.15

இப்போது மிக முக்கியமான செய்திக்கு வருவோம். இந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின் போது அவர்களின் பின்னணியை விசாரித்து அனுப்பும் பொறுப்பு மத்திய அரசின் உள்துறையின் கீழ் பணியாற்றும் இன்டெலிஜென்ஸ் பீரோ என்னும் உளவுத்துறையையே சாரும். அப்படி இருக்கையில், கல்லூரிக்கே செல்லாமல், தொலைத்தொடர்புத்துறை அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்த ஒருவனை, போலி சான்றிதழ்களை கூட விசாரிக்காமல், மாநில கவர்னரை விட அதிக அதிகாரம் படைத்த உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தகுதியானவர் என்று உளவுத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி உள்ளனர் என்றால், உளவுத்துறையில் எவ்வளவு துட்டு விளையாடி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த டுபாக்கூர் நீதிபதியான, டைப்பிஸ்ட்டு தனபாலன் சுமார் 25,000 வழக்குகளில் தீர்ப்பளித்து, தமிழக மக்களின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார். இன்னுமும், தனக்கு வேறு அரசு பதவிகள் வேண்டும் என்று அரசுகளை நச்சரித்து வருகிறார்.

4 ஆண்டுகளாகியும், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியான கர்ணனே எழுத்துப்பூர்வமாக பல புகார்கள் அளித்தும், சிபிஐக்கு உத்தரவிட்டும், இன்று வரை தனபாலனின் போலி சான்றிதழ் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாமல், இந்த புகாரை கூறிய கர்ணனை பழி வாங்கி உள்ளார் தலைமை நீதிபதி கவுல்.

இதே போல் தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு போலியான சட்டப்பட்டம் பெற்ற அனைத்து வக்கீல்களின் பாதுகாவலனாக திகழும் தலைமை நீதிபதி சஞ்சய் கவுல், நேர்மையாக உழைத்து, ஊழலுக்கெதிரான போராடி வரும் வக்கீல்கள் 170 பேரை சஸ்பெண்டு செய்து வில்லனாக்கி வருகிறார்.

FL30LAW1_2583042g

Share