அகில இந்திய அளவில் தினம் தோறும் நடக்கும் கற்பழிப்புகளும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் மாநில அரசுகளை மட்டுமே  குறை கூறுவது நமக்கு வாடிக்கையானதற்கு காரணம், நீதித்துறையின் மேல் உள்ள அச்சம்.

13903182_1136268553101280_7918117473563410950_n

ஆனால் உண்மையில் இதுபோன்ற கற்பழிப்புக்களும் கொலைகளும் சாதாரணமாக நடக்க காரணம், காசு கொடுத்தால் எப்படியும் தப்பி விடலாம் என்று நீதிபதிகளின் மீது குற்றவாளிகளுக்கு  உள்ள நம்பிக்கை.

உதாரணமாக தஞ்சையில் 4 நாட்களுக்கு முன் நடந்த கற்பழிப்பு மற்றும் கொலையில், கொடூரமான காயங்களை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், ஆண்டுக்கு இது போன்ற 15 முதல் 20 சம்பவங்கள் ஒரு ஊரில் மட்டுமே நடப்பதாக கூறப்படுவது தான். இவற்றில் நீதித்துறையின் பங்களிப்பு என்ன என்பதை ஒரே ஒரு வழக்கை உதாரணமாக எடுத்து பார்ப்போம்.

2013ம் ஆண்டு – திருப்பூர் மாவட்டம் வெள்ளியாம்பாளையம் கிராமம். தங்கவேல் ராஜாத்தி தம்பதிக்கு பிறந்த ஒரே மகளான தாமரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பிளஸ் 2 படித்து வந்தார். 3.11.13 அன்று, 3 வயது பெண் குழந்தைக்கு தகப்பனாக அருண் குமார், நிர்பயாவின் வாயை துப்பட்டாவால் கட்டி பாலியல் பலாத்காரம் செய்யும் போது அலறல் கேட்டு பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்தனர். தலையில் ஏற்பட்ட அடியில், மயக்கமடைந்த தாமரை மரணமடைகிறார். 

காவல்துறையினர் கற்பழிப்பு, மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஊர் மக்களால் கையும் களவுமாக பிடிபட்ட குற்றவாளியை விசாரிக்கையில் கீழ்க்கண்ட விவரங்கள் புலனாகிறது,

conf 1
conf-1_2-1024x593
conf 2conf 2_2
conf-3_2-1024x574
conf 3

சிறையில் இருக்கும் அருண் குமாரை எப்படியாவது வெளியில் எடுக்க வேண்டும் என்று கோரி ஜாமீன் மனு தாக்கல் செய்து அரசு வழக்கறிஞர் KN.சுப்ரமணியம் மூலம் நீதிபதி கணேசனுக்கு 25,000 ருபாய், லஞ்சம் கொடுத்தனர். தன் பங்குக்கு, அரசு வக்கீல் KN.சுப்பிரமணியம் 7,500 ருபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டார்.

பணத்தை பெற்றுக்கொண்ட கையோடு வழக்குக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார் அரசு வக்கீல் KN.சுப்ரமணியம்.

36e8ad53-59fb-45a4-8f7e-f8034269a614

Public Prosecutor KN.Subramaniam

பணத்தை பெற்றுக்கொண்ட நீதிபதி கணேசன், ஜாமீன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் வழக்கு குறித்து எவ்வித கருத்தாய்வும் செய்யாமல் அரசு வக்கீல் சுப்ரமணியம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை காட்டி உடனடியாக ஜாமீன் வழங்கினார்.

வழக்கமாக இது போன்ற குற்றங்களில் ஜாமீன் வழங்கும் போது, குற்றம் சட்டப்பட்டவருக்கு சில நிபந்தனைகள் விதிப்பது வழக்கம்.

பெரும்பாலும், குற்றம் சட்டப்பட்டவரை வேறு ஊரில் தங்கி தினசரி நீதிமன்றஙத்திலோ அல்லது காவல் நிலையத்திலோ கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் நடைமுறை உண்டு.

இதற்கு காரணம், குற்றம் சாட்டப்பட்டவரை நிபந்தனை இல்லாமல் சுற்ற விட்டால், அவன் சாட்சிகளை மிரட்டுவதும், கலைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவே.

ஆனால் நீதிபதி கணேசனோ, அருண் குமாருக்கு சொந்த ஊரிலேயே இருப்பதற்கு அனுமதி வழங்கினார்.

bail 1bail 2
13521632_10209629031580470_414369312_n

District Judge Ganesan

ஜாமீனில் வெளி வந்த கையோடு அருண்குமார் இறந்த பெண்ணின் பெற்றோரை மிரட்ட, அவர்கள் உடனடியாக நடந்த சம்பவங்கள் அனைத்தையும் புகாராக எழுதி தலைமை நீதிபதிக்கு புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல், அதன் நகலை பல அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தனர்.

cplt to cji

cji-cplt-2-651x1024

ack-1024x643

புகாரை பெற்ற தலைமை நீதிபதி சஞ்சய் கவுல், 6  மாதமாக இது குறித்து எந்த நடவைக்கையும் எடுக்காமல் இருந்ததால், திருப்பூர் வக்கீல் சங்கம் பொதுக்குழுவை கூடி சில தீர்மானங்களை இயற்றியது. 

அந்த தீர்மானத்தில் கணேசன் ஒரு ஜல்சா பேர்வழி என்றும், நீதிமன்ற பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், வழக்கமாக மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் அனைத்து கற்பழிப்பு வழக்குகளையும் புடுங்கி தானே விசாரிப்பேன் என்று, கோப்புகளை வைத்துக்கொண்டு, குற்றவாளிகளிடம் துட்டு வாங்கிக்கொண்டு விடுதலை செய்து வருவதாக தெரிவித்தனர்.

scan0005

scan0006-765x1024_2scan0006-765x1024

12509429_10208168939639084_4752331173095053218_n

Chief Justice Sanjay Kaul

இதற்கும் செவி சாய்க்க மறுத்த தலைமை நீதிபதி, இது போன்ற வழக்குகளில் நீதிபதி மீது நடவடிக்கை எடுத்தால் நீதிபதிகள் மீது மக்களுக்கு உள்ள பயம் அகன்று விடும் என்பதற்காக, எவன் பொண்ணு செத்தா எனக்கென்ன என்று கண்டும் காணாமல் விட்டு விட்டார்.

தகவல் அறியும் சட்டத்தை கீழ் பெறப்பட்ட தகவல்களை வைத்து பார்க்கும் போது, கணேசன் இதே போல் 16 கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்ததும், அது மட்டுமல்லாமல் 2 வழக்குகளில் முன் ஜாமீன் கொடுத்துள்ளதும் தெரிய வருகிறது.

scan0007

இந்த லட்சணத்தில், மனித உரிமை கமிஷன் என்ற அமைப்பின் உறுப்பினர், நீ யாருக்கோ அனுப்பிய புகாரை எனக்கும் அனுப்பி வைத்திருக்கிறாய், அதனால் உன் புகாரை விசாரிக்க மாட்டேன் என்று திமிர்த்தனமாக வழக்கை ஏற்றுக்கொள்ள மறுத்து தள்ளுபடி செய்தார்.

shrc

கூட்டி கழித்து பார்த்தால் வெறும் 32,500 ரூபாய்க்கு ஒரு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கை விற்று அதை நியாயப்படுத்தி தவறு செய்தவனை காப்பாற்றி வருகின்றனர் நம் நீதிபதிகள். இதற்கு கீழ் கோர்ட்டிலிருந்து தலைமை நீதிபதி வரை உடந்தையாக இருந்துள்ளனர் .

இப்பொழுது  தெரிகிறதா, ஏன் வக்கீல்களை  எதிரிகளாக நீதிபதிகள் பார்க்கிறார்கள், என்று ?

Share Button