இந்த இளம் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் மதன்குமார், கடந்த 10 மாதங்களாக வழக்கறிஞர் தொழில் செய்வதிலிருந்து தமிழக பார் கவுன்சிலால்  சஸ்பெண்டு  செய்யப்பட்டுள்ளார்.

இவர் செய்த தவறு என்ன  ?

1380289_1385742168332827_2024783577_n

Mathan Kumar Advocate

இவருடைய கட்சிக்காரரான, திருமதி லட்சுமி இவரை அணுகி,   தானும் தன் உறவினர்கள் 6 பேரும் (வயது 35 முதல் 70  வரை), காவல்துறையில் செல்வாக்கு பெற்ற நில மோசடி கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொழுது காவல் துறையினர், தன் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக அதே குற்றவாளிகளை அனுப்பி மருத்துவமனையிலேயே மீண்டும் தாக்குதல் நடத்தியதாகவும், வழக்கு பதிவு செய்வதை தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்றும்  தெரிவித்தார்.

தன்னை டிஸ்சார்ஜ் செய்ய காவல் துறையினர் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டும், தலையில் பலத்த அடிபட்டு இருந்ததால், மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து விட்டனர். அதனால், குற்றவாளிகள் மீது குங்கும நீரை தடவி (ரத்தம் போல தோற்றமளிக்க) அவர்களையும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் காவல் துறையினர். இந்த இரு மருத்துவமனை சேர்க்கை அறிக்கைகளின் அடிப்படையில் இரு FIRகளை பதிவு செய்த போலீசார், தாக்கியவர்களின் புகாருக்கு முதல் வழக்கு எண்ணும், லட்சுமியின் புகாருக்கு அடுத்த எண்ணும் வழங்கினர். வழக்கு பதிவு செய்தவுடன், லட்சுமியின் உறவினர்களை அணுகி, நீங்கள் முன் ஜாமின் பெற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் உங்களை கைது செய்ய வேண்டி இருக்கும் என பயமுறுத்தி, அறிவுரை கூறுவது போல நடித்து, லட்சுமியின் உறவினர் ஒருவரை விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திரு.பொன்சிவாவிடம் அனுப்பி வைத்தனர். பொன் சிவாவோ, தான் அரசு வழக்கறிஞர் என்பதால் தன் பெயரில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி, தன் ஜூனியர் செல்வ குமார் பெயரில் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு முன் ஜாமீன் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வக்கீல் பீஸ் பெற்றுக்கொண்டார்.

IMG-20160524-WA00382

Pon Siva Public Prosecutor

522ab959-9096-4d71-a26b-112540f51888-11

அடிபட்ட 7 பேருக்கும் இந்த முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் தெரியாததால், அவர்களில் ஒருவரின் கையொப்பம் கூட ஜாமீன் மனுவிலும், வக்காலத்திலும் பெறப்படவில்லை. அரசு வழக்கறிஞர் பொன்சிவா கொடுத்த அழுத்ததின் பேரில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், கற்பகவிநாயகம் 2003ம் ஆண்டிலும், PR.சிவக்குமார் 2009ம் ஆண்டிலும் பிறப்பித்த உத்தரவுகளை மீறி இந்த ஜாமீன் மனு ஏற்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது.

c1e48ff6-8652-4bad-bb82-9dca770dfa55

ஜாமீன் மனுவிலும், வக்காலத்திலும் 70 வயதான கண்ணையாவின் வயது 30 என்று குறிப்பிடப்பட்டது.

wfewfw

Kannaiyan

53 வயதான நான்காவது மனுதாரர் ராஜியின் வயது 28 என்றும், 35 வயதான ஐந்தாவது மனுதாரர்  ஜெயராமன் 25 வயதானவர் என்றும் காட்டப்பட்டிருந்தது.

Capture

Jeyaraman

40 வயதான ஏழாவது மனுதாரர் லட்சுமியின் 27 என்றும் காட்டப்பட்டிருந்தது.

scewcewwe

Lakshmi

05.08.2014 அன்று மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த பொழுது, அரசு வழக்கறிஞர் பொன்சிவாவின் ஜூனியர் செல்வகுமார் ஆஜராகி 7 மனுதாரர்களும் மைனர்கள் என்றும், அடிபட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர் என்றும் வாதிட்டார். இது நீதிமன்ற உத்தரவில் பதிவாகியுள்ளது. காவல்துறை சார்பாக ஆஜரான பொன்சிவா, வாய் திறக்காமல் நிற்க, அனைவருக்கும் முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி கிருஷ்ண்மூர்த்தி. அடிபட்டவர் டிஸ்சார்ஜ் ஆனதால் முன் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையென்றாலும், தான் முன் ஜாமீன் கொடுப்பதாக  தீர்ப்பு வழங்கினார்.

scan0001

ஜாமீன் கேட்காத நிலையில், இந்த தீர்ப்பின் அடிப்படையில், 7 பேரும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும்,  வேலை வெட்டியை விட்டுவிட்டு அதே காவல்துறையினர் முன் ஆஜராகி கையெழுத்து போட நேர்ந்தது.

Wedding-Copy1

District Judge Krishnamurthy

இதற்கிடையில் ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. போலீசும், பொன்சிவாவும், கூட்டணி அமைத்துக் கொண்டு இதே போல பல வழக்குகளில் ஜாமீன் தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல், மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி பல வழக்குகளில், மனுதாரரரின் வக்கீலையோ, அரசு வக்கீலையோ விசாரிக்காமலே, (A) மனுதாரர்கள் மைனர்கள் என்றும், (B) அடிபட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர் என்றும்,  (C) டிஸ்சார்ஜ் ஆன  காரணத்தினாலோ முன் ஜாமீன் வழங்க முடியது என்றும், பல வழக்குகளில் தானாகவே தீர்ப்பு வழங்கி, அவற்றில் வக்கீல்கள் தான் இவ்வாறு வாதிட்டதாக எழுதி  உள்ளார். அது மட்டுமல்லாமல்,  இவர் மாவட்ட நீதிபதியாக இருந்த 2 ஆண்டுகளில் இதே போல் வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்காமலே, ”மேற்படி” காரணங்களுக்காக பல ஆயிரம் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் என்ற உண்மையும் தெரிய வந்தது.

அதில் சில தீர்ப்புகள் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

SCAN0003

SCAN0000scan00011

SCAN0004SCAN0005 இதனால் திருமதி லட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் Crl OP 30502/14 என்ற வழக்கினை தாக்கல் செய்து, மாவட்ட நீதிபதி, அரசு வக்கீல் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரினார். நீதிபதி, அரசு வக்கீல் மற்றும் காவல்துறையை, பிரதிவாதியாகவும் சேர்த்திருந்தார். இந்த வழக்கு பல நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போதும் சுமார் 5 மாதமாக மூவரில் ஒரு பிரதிவாதி கூட பதில் மனு தாக்கல் செய்யவில்லை. 07.04.2015 அன்று வழக்கு பிரகாஷ் என்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது, மதன் குமார் தன் சார்பாக என்னை ஆஜராகி வாதிடுமாறு அழைத்தார். என்னைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், வழக்கை விசாரிக்காமல் சம்பந்தம் இல்லாத பல விஷயங்களை பேசி, யாரையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குவதாகச் அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார். மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் நடந்து கொண்ட பிரகாஷின் செயல்பாடுகளை, மறுநாளே கிஷன் கவுலின் கவனத்திற்கு  எடுத்துச்சென்றது மட்டுமல்லாமல், எழுத்துப்பூர்வமாகவும் அதை பதிவு செய்தேன்.

scan0001-2scan0003scan0004

07.04.2015 அன்று தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு வழங்கப்படுவதற்காக ஒத்தி வைத்த வழக்கை, 10.04.2015 அன்று பிரகாஷ் கவனித்த போது, லட்சுமியின் மெமோவில் (வக்காலத்து) மதன் குமாரின் கையெழுத்து இல்லாமல் இருந்தது. ஆனால் என் முன்னால் உறுதிமொழியிட்டு   கையெழுத்திட்டது லட்சுமி தான்   என்று விழுப்புரத்தில் உள்ள  ஒரு மத்திய அரசின் நோட்டரி வக்கீல் கையொப்பமிட்டு, முத்திரை குத்தி, உறுதிமொழி சான்று அளித்திருந்தார். விழுப்புரம் வக்கீலிடம், உயர்நீதிமன்ற மெமொவின் படிவம் கைவசம் இல்லாத காரணத்தால் மாஜிஸ்திரேட் கோர்ட்டு மெமொ படிவத்தில், நீதிமன்ற பெயரை அடித்துவிட்டு உயர் நீதிமன்றம் என கைப்பட எழுதியதாலும், அந்த நடைமுறை புதிதாக வக்கீலாக தொழில் துவங்கிய மதனுக்கு பரிச்சயம் இல்லாத காரணத்தினாலும், தான் எங்கு கையொப்பம் இட வேண்டும் எனத் தெரியாமல் கவனக்குறைவாக விட்டு விட்டார்.

scan00012-584x10241 இதை கையில் எடுத்துக் கொண்ட பிரகாஷ், உதவி பதிவாளருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து, வக்கீல் கையெழுத்து இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மெமொவை பரிசீலிக்காமல், எப்படி வழக்கு எண் வழங்கப்பட்டது என்பது குறித்த பரிசோகரின் விளக்கத்தை பெறுமாறு ஆணையிட்டார்.

scan0002-2

16.04.2015 அன்று பரிசோதகர் மகாதேவனை மிரட்டி பெற்ற விளக்கத்தில், 14.11.2014 (6 மாதங்களுக்கு முன்பு) வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது தான் (மகாதேவன) கவனக்குறைவாக இருந்து விட்டதாகவும், வழக்கை தாக்கல் செய்தவுடன் மதன்குமார் தன்னிடம் வந்து உடனடியாக வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், இதை என் தூண்டுதலின் பேரில் மதன் செய்ததாகவும், அது மட்டுமல்லாது, எங்களின் கூட்டணி வக்கீல்கள் எப்போது வழக்கு தாக்கல் செய்தாலும், இவ்வாறு மிரட்டுவதாகவும், தனக்கு குடும்பம் குட்டி இருப்பதால் தான் பயந்து இருப்பதாகவும், அது மட்டுமல்லாமல் பல பரிசோதகர்களை நாங்கள் மிரட்டி வழக்குகளை ஏற்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

scan0003-21scan0005-2

உடனடியாக, 16.04.2015 வழக்கை மீண்டும் “பேச அனுமதி கோரி” (For Being Mentioned) என்ற தலைப்பில் யாரும் அவ்வாறு அனுமதி கோராமலே பட்டியலிட்ட பிரகாஷ், பொன்சிவாவின் ஜூனியர் செல்வகுமாரையும் வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டார். லட்சுமியையும், 22.04.2015 அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். மதன்குமாரோ, முறையாக கையொப்பம் இட்ட ஒரு மெமொவை புதிதாக தாக்கல் செய்து, ஒரு விளக்க மனுவையும் தாக்கல் செய்து, மற்ற வக்கீல்களை போல இல்லாமல் ஒவ்வொரு கையெழுத்துக்கும் நோட்டரி சான்று பெற்றுதான்  தாக்கல் செய்ய வேண்டும் என்று நான் பயிற்சி அளித்துள்ளதாகவும், எந்த வழக்கிலும் நோட்டரியின் கையெழுத்து இல்லாமல் தான் தாக்கல் செய்ததில்லை என்றும் விளக்கமளித்தார்.

scan00013-974x10241

சாதாரண சூழ்நிலையில், இந்த விவகாரம் இத்துடன் முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் பிரகாஷோ, கோடை விடுமுறைக்கு பிறகு வழக்கை ஒத்தி வைத்தார். அத்தோடு மட்டுமல்லாமல் மிகவும் கீழ்த்தரமாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டார். அவருக்கு நான் பதிலளிக்கையில் , பிரகாஷ் வேண்டுமென்றே என் ரத்தம் குடிப்பதற்க்காக இவ்வாறு நடந்து கொள்வதாக தெரிவித்தேன். அதற்கு காரணம், பிரகாஷ் 4 ஆண்டுகளுக்கு முன் சங்கரராமன் கொலை வழக்கில், கூலிப்படை தலைவன் அப்பு மற்றும் கதிரவனுக்கு வக்கீலாக வழக்கு நடத்தியதையும், அந்த வழக்கில் நீதிபதிக்கு முதல் குற்றவாளியான சங்கராச்சாரியார் லஞ்சம் கொடுத்த ஆடியோ உரையாடலை விசாரிக்க வழக்கு தொடர்ந்து அதில் கொலை வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு பெற்றதையும், அது மட்டுமல்லாமல் பார்ப்பன சாதி ரீதியாக என்னை பழி வாங்குவதாகவும் தெரிவித்தேன். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பிரகாஷ், நான் உங்களுக்கு எதிராக எந்த வழக்கிலும் ஆஜராகவில்லை என்று எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் முழுப்பூசணிக்காயை சோற்றில்  மறைத்தார்.

இந்த துணிச்சலுக்கு காரணம், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், பிரகாஷ் மீது நாம் அளித்த 4 பக்க புகாரை விசாரிக்காமல் நிராகரித்தது தான்.

1

04.08.15, அன்று பிரகாஷ் வழங்கிய இறுதி தீர்ப்பில், ரெடிமேடாக தயார் செய்து வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவுகளை நியாயப்படுத்தி, இந்தியா அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அல்ல என்றும், அந்த மோசடி நீதிபதி கிருஷ்ணமூர்த்தி ஒரு அஷ்டாவதாணி என்றும் புகழாரம் சூட்டினார். அதோடு மட்டுமல்லாமல் லட்சுமியின் வழக்கையே தான் சந்தேகப்படுவதாகவும், அது நீதிபதி கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தில் வைக்கப்ப்ட்ட ஒரு கத்தி எனவும் தீர்ப்பில் எழுதினார்.

2

PN.Prakash – Judge Madras High Court

மேலும், வக்கீலுக்கும் பரிசோதனை கிளார்க்குக்கும் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் நீதிமன்ற அவமதிப்பு எனக் கூற முடியாது என்றும், வக்கீல்களுக்கும் பல பிரச்சனைகளுக்கிடையே தான் பணி புரிக்கின்றனர், அதேபோல பரிசோதகர்களும் ஊசி போல குத்தி பல குடைச்சல்கள் கொடுக்கும் போது அமைதியான வக்கீல்களுக்கு கூட கோபம் வரும். ஆனால் மணிகண்டன் மற்றும் மதன்குமார் ஆகியோர் இதற்கு விதிவிலக்கு. இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்து, பல நிவாரணங்களை கோருவது, அவர்களுக்கு  வாடிக்கையாகிவிட்டது, என்று தீர்ப்பில் எழுதினார்.

3

மேலும், சங்கரராமன் கொலை வழக்கில், வெளியான லஞ்ச ஆடியோ வழக்கான WP 19894/11ல் கூறப்பட்ட தீர்ப்பின், பல பத்திகளை மேற்கோள் காட்டினார். இந்த பத்திகள் ஒரிஜனலாக சங்கரராமன் மனைவி பத்மாவை மிரட்டும் தொனியில் எழுதப்பட்ட வாசகங்கள் ஆகும்.

4

Mrs.Padma, widow of a brahmin priest Sankararaman who was murdered in the Lord VaradarajaPerumal temple

பிரகாஷ் தன் 22 பக்க தீர்ப்பில் கூறியதாவது  (கிளிக் செய்யவும்)

1)  Crl OP 30502/14,  தள்ளுபடி செய்யப்படுகிறது,

2)  லட்சுமிக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்கிறோம். காவல் துறையினர் அவரை கைது செய்யலாம்.

3)  பார் கவுன்சில், மணிகண்டன், மதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4)  அவர்கள் இருவர் மீதும்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இந்த நீதிமன்றம் தன்னிச்சையாக பதிவு செய்கிறது.

5

பிரகாஷ் இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இந்த வழக்குக்கு சம்பந்தமே இல்லாத 3 வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, அதிலும் மதன் மீதும் மணிகண்டன் மீதும் நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல் மேலும் ஒரு வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்தார்.

இந்த அவமதிப்பு வழக்கினை பரிசீலித்து, 2 நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணைக்கு அனுப்ப வேண்டிய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், கண்மூடித்தனமாக, என்னவென்றே ஆராயாமல்,சிறப்பு அமர்வுகளுக்கு அவற்றை பரிந்துரை செய்தார்.

இவர்களில் ஒருவருக்குக் கூட, தமிழகத்தில் இவ்வாறு மோசடியாக ஜாமீன் உத்தரவுகள் வழங்குவது பற்றியோ, அரசு வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிபதிகளும் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொலை, கற்பழிப்பு, கொள்ளை வழக்குகளில் ஜாமீன்/ விடுதலை வழங்குவது என்பது ஒரு தவறாகவே தெரியவில்லை.

6

SANJAY KISHAN KAUL

இதன் பிறகு, பல குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட, பார் கவுன்சில் சேர்மேனான செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து நம் இருவரையும் பணிபுரியாதவாறு நிறுத்த உத்தரவு (சஸ்பென்சன்) பிறப்பிக்க வைத்தார்.

10301430_812227038842149_1737714412073776452_n

D.Selvam

78910

மொத்தத்தில் 27.07.2015 முதல் 27.08.015 வரை, ஒரே மாதத்தில், 6 வழக்குகளை எடுத்து,  2ல் நீதிமன்ற அவமதிப்பும், 4ல் பார் கவுன்சில் விசாரணையும் நடத்த உத்தரவிட்டு, பழிவாங்கியுள்ளார் பிரகாஷ். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த 6 வழக்குகளிலும் என் மீது 11 மாதங்களாகியும், உயர்நீதிமன்றமும் சரி, பார் கவுன்சிலும் சரி ஒரே ஒரு குற்றச்சாட்டு கூட கூற முடியவில்லை.

சுருக்கமாக சொன்னால் எங்களை நீதிமன்றத்துக்கு வராமல் தடுத்து விட்டால், இந்த கானொளியில் விவாதிக்கப்படும் லஞ்சம் எந்த நீதிபதிக்கு கொடுக்கப்பட்டது என்ற உண்மையை மறைக்கலாம் என்பதே.

ஆனால், இந்த லஞ்சத்தை மறைக்க சஞ்சய் கிஷன் கவுலுக்கு என்ன ஆர்வம் ?

சஞ்சய் கவுலுக்கும், சங்கரராமன் கொலைக்கும் என்ன தொடர்பு ?

சங்கரராமன் கொலை வழக்குக்கு சம்பந்தமே இல்லாத மதனை ஏன் நீக்கி வைக்க வேண்டும் ?

தொடரும் ……

Share Button