kanimozhi_dmk_248-1

சிவில் வழக்குகளில் போல, கிரிமினல் வழக்குகளில் சிறப்பு அதிகாரம் கீழமை நீதிமன்றங்களுக்கு அளிக்கப்படவில்லை. தவறாக பயன்படுத்தப்படும் என்பதால் உயர்நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில கோணங்களில் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 226லும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 482ன் கீழும் உயர்நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், உச்சநீதிமன்றத்தை விட அதிகமானது என்றும் கருதப்பட்டுள்ளது. அதனால் கீழமை நீதிமன்றங்கள், அதாவது மாஜிஸ்திரேட்டு மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்களில் புதியதாகவோ, அல்லது வித்தியாசமாகவோ ஒரு சட்டப்பிரச்சனை தோன்றினாலோ/எழுப்பப்பட்டாலோ அதை எதிர் கொள்ள முடியாமல்/விரும்பாமல் ஆஸ்டிரிச் பறவையை போல கீழமை நீதிமன்றங்கள் தம் தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளும். மாறாக, உச்சநீதிமன்றமோ, தன்னிடம் நேரடியாக மனு தாக்கல் செய்வதை எப்பொழுதும் கண்டித்தே வருகிறது. ஏனெனில் தன் வேலை பளுவை அது அதிகரிப்பதாக எண்ணுகிறது. இதனால், தொட்டதெற்கெல்லாம் உயர்நீதிமன்றத்துக்கு ஓடும் சூழ்நிலை நிலவுகிறது.

2G அலைகற்றை ஊழலை மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நாம் யாவரும் அறிந்ததே. ஆனால் நம்மில் பலருக்கு தெரியாத செய்தி என்னவென்றால் அந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம், விசாரிக்க தகுதி இல்லாத வழக்கு என்று கூறி விசாரிக்காமலே தள்ளுபடி செய்தது என்பது.  இவ்வளவு பெரிய ஊழலை, விசாரணையின்றி ஒரு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறதென்றால் நீதித்துறையின் லட்சணத்தை நம்மால் உணரமுடிகிறது. இத்தனைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் தலைநகரின் சட்ட வல்லுனர்கள் குழுமி இருக்கும் அறிவார்ந்த நீதிமன்றம் என்று பெயர் பெற்ற நீதிமன்றம் .

அந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றம் சென்ற போது அதிர்ஷ்டவசமாக ஊழல் வழக்குகளைப் பற்றி நன்கு அறிந்த நீதிபதி சிங்வி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த மேல் முறையீட்டை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சி.பி.ஐ  விசாரணையை 16.12.10 முதல் நேரடியாக கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது.

Justice-G-S-Singhvi

Justice.Singhvi

சி.பி.ஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க தொடங்கியவுடன், தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்திய சி.பி.ஐ, லஞ்சப்பணத்தில் ஒரு பரிமாற்றமான 200 கோடி ரூபாயை ஷாகித் பால்வா என்பவன் மூலமாக கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துக்கு சென்றுள்ளதை கண்டு பிடித்தது. கலைஞர் தொலைகாட்சியின் 60 சதவீத பங்குகளை தயாளு அம்மாளும், மீதம் 40 சதவீதத்தை கனிமொழியும், சரத் ரெட்டி என்பவரும் ஆளுக்கு 20 சதவீதம் என வைத்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இருக்கும் ஒரு விசாரணையை குலைத்து உண்மைகளை மூடி மறைப்பதற்காக, குற்றவாளிகள் ஒரு சதித்திட்டம் தீட்டினர். அதன்படி லஞ்சமாக பெற்ற 200 கோடியை கடன் என்றும், அந்த தொகையை உடனடியாக வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாக கூறி, போலி ஆவணங்களை தயாரித்தனர்.

Jaffar-Sait-2

Jaffar Sait

ஆனால், போலி ஆவணங்களை புனைந்த இந்த விபரங்கள் 3 ஆண்டுகள் கழித்து 2014ல், 4 தொலைபேசி உரையாடல்கள் மூலமாக தெரிய வந்தது.

அந்த உரையாடல்களின் விபரம் பின்வருமாறு

  1. 23.11.10 உளவுத்துறை ஐ.ஜி ஜாபர் சேட் கனிமொழியுடன் பேசிய உரையாடல்
  2. 31.12.10 ஜாபர் சேட் கருணாநியின் உதவியாளர் சண்முகநாதனிடம் பேசிய உரையாடல்
  3. 13.2.11 ஜாபர்சேட் கலைஞர் டிவியின் சரத் ரெட்டியுடன் பேசிய உரையாடல்
  4. 16.2.11 ஜாபர் சேட் கனிமொழியுடன் பேசிய மற்றொரு உரையாடல்.

(உரையாடல்களை கேட்க, மேலே குறிப்பிட்டுள்ள லிங்க்குகளை அழுத்தவும். அந்த உரையாடல்கள், எழுத்துப்பூர்வமாக  இக்கட்டுரையின் பின்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது .)

இந்த உரையாடல்களின் போது, சரத் ரெட்டி, சண்முகநாதன், கனிமொழி, ஆகியோருடன் அளவளாவிய ஜாபர் சேட், வரவிருக்கும் சி.பி.ஐ விசாரணை/ரெய்டு குறித்த (சி.பி.ஐயில் உள்ள தமிழக காவல் துறையின் உளவாளிகள் மூலம் கிடைத்த) தகவல்களை பரிமாறுவதோடு மட்டுமல்லாமல், வாங்கியது லஞ்சம் அல்ல, கடன் என்று போலி ஆவணங்களை உருவாக்கியது பற்றியும், கருணாநிதிக்கு இந்த ஊழலில் இருந்த தொடர்பு குறித்தும் விவாதிக்கிறார்.

21-shanmuganathan-karunanidhi-600

Karuna with his PA Shanmuganathan

ஜாபர் சேட்டின் கீழே பணிபுரிந்த வேறொரு உளவுத்துறை அதிகாரி, இந்த உரையாடல்களை ஆச்சிமுத்து ஷங்கர் என்பவரிடம் கசிய விட, ஷங்கர் எவ்வளவோ முயன்றும் அவற்றை வெளியிட முடியவில்லை. அப்போது திமுக ஆட்சி நடைபெற்றதாலும், தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவும், இந்த உரையாடல்களை வெளியிட தமிழக ஊடகங்கள் நடுங்கின.

இறுதியாக சங்கர் இந்த உரையாடல்களை பிரசாந்த்  பூஷனிடம் கொடுத்து, டெல்லியில் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தை அழைத்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில், பிரசாந்த்தை வெளியிடச்செய்தார்.

2G_1744771g1

Prashant Bhushan & Yogendra Yadav releasing the audio tapes in Delhi.

தன் சார்பாக முறைப்படியான ஒரு குற்றவியல் புகாரையும், சிபிஐயில் தாக்கல் செய்தார் சங்கர். ஆனால், சி.பி.ஐ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தான் எழுத்துப்பூர்வமாக 6.2.14ல் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிடுமாறு குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 482ன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் வக்கீல் மூலமாக ஒரு வழக்கு தொடுத்தார். வழக்கில் எதிர்மனுதாரராக சி.பி.ஐ இயக்குனரை சேர்த்திருந்தார்.

scan0001-592x1024

scan0002

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கு தாக்கல் செய்தவுடன், அது ஒரு பரிசோதகரால் (Examiner) ஆய்வு செய்யப்பட்டு, அதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு திருப்பப்படும். குறைகள் இல்லையெனில், மனுவுக்கு வழக்கு எண் வழங்கப்பட்டு  நீதிபதியின் முன் விசாரணைக்கு பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்படும் போது நீதிபதி அந்த வழக்கை விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்று வக்கீல் வாதங்களை கேட்டு திறந்த நீதிமன்றத்தில் முடிவெடுப்பார். விசாரணைக்கு உகந்த வழக்கு என முடிவெடுக்கப்பட்டால், எதிர்மனுதாரர்களுக்கு நீதிமன்றம்   நோட்டீஸ் அனுப்பும்.

அந்த நோட்டீசையும், வழக்கு ஆவணங்களையும் பெறும் எதிர்த்தரப்பினர், தங்கள் சார்பாக ஒரு வக்கீல் வைத்து, அவருக்கு ஒரு வக்காலத்து வழங்கி, வழக்குக்கு மறுப்புரை தாக்கல் செய்வர். எதிர்த்தரப்பினர் வக்காலத்தையும், மறுப்புரையையும் பெற்ற பிறகு, வாதி வக்கீலும், எதிரணி வக்கீல்களின் வாதங்களையும் கேட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.

பரிசோதகர் வழக்கு கோப்பை ஆய்வு செய்யும் கட்டத்தில், மனுவை அவருக்கு மேல் உள்ள பிரிவு அலுவலர் (section Officer), உதவி பதிவாளர், துணைப்பதிவாளர், ஆகியோர் கோப்பை மேல் பரிசோதனை செய்ய வேண்டும். மக்கள் மத்தியில் பிரபலமான வழக்கு என்றால் இந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல் நீதித்துறையின் பதிவாளர், மற்றும் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரின் அனுமதி பெற்ற பிறகே வழக்கை ஏற்றுக் கொண்டு, அதற்கு வழக்கு எண் வழங்கி, பிறகு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.

மேலும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், சம்பந்தப்பட்ட நீதிபதியின் கவனத்துக்கும் எடுத்து செல்லப்பட்டு அவரின் வாய் மொழி உத்தரவுக்கு பிறகுதான் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், சுமார் 40 நீதிபதிகள் பணிபுரிவதால், தலைமை நீதிபதி 3 மாதங்களுக்கு ஒருமுறை வழக்குகளின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொறு நீதிபதிக்கும் ஒவ்வொறு துறை ஒதுக்குவார். (உதாரணமாக ஜாமீன் வழக்குகள், சிவில் வழக்குகள் etc..) எக்காரணம் கொண்டும் தலைமை நீதிபதியின் எழுத்துப்பூர்வ உத்தரவு இல்லாமல், அவரால் ஒதுக்கப்பட்ட துறையை யாராலும் மாற்ற முடியாது. ஒரு வேளை சம்பந்தப்பட்ட நீதிபதி விடுமுறையில் சென்றாலோ, வேறு அவசர பணி இருந்தாலோ, தலைமை நீதிபதியின் எழுத்துப்பூர்வ உத்தரவுடன் குறிப்பிட்ட வழக்குகள், வேறு நீதிபதிக்கு மாற்றி விசாரிக்கப்படும்.

இந்த சிறப்பு அதிகாரம் மட்டுமே தலைமை நீதிபதிக்கும் இதர நீதிபதிகளுக்கும் உள்ள அதிகார வேறுபாடு ஆகும்.

download

Acting CJ Sathish Agnihotri

இவ்வாறு 17.3.14 அன்று வெளியிடப்பட்ட துறைகளின்படி, சி.பி.ஐ மற்றும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளின் விசாரணை, நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

KIRUBAKARAN-j

Justice Aruna Jagadeesan

scan0001

scan0001kscan0003 - Copy

scan0003

ஆனால், சங்கரின் Criminal OP 6051/14 வழக்கினை அருணா ஜெகதீசனிடம் பட்டியலிடாமல், 20.3.14 அன்று கருணாநிதிக்கு நெருக்கமான C.T.செல்வத்திடம் பட்டிலிடுகிறார், அப்போதைய தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி.

C.T.செல்வம் யார் என்றால், தான் நீதிபதியான பிறகு, தன் சக நீதிபதியும் திமுக உடன்பிறப்புமான ராஜ இளங்கோவுடன் சென்று கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றவர். ராஜ இளங்கோ மீதும் C.T.செல்வம் மீதும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ராஜ இளங்கோ ஆந்திர மாநிலத்துக்கு மாறுதல் செய்யப்பட்டவர். இதே போல் கருணாநிதிக்கு விசுவாசமாக செயல்பட்ட மற்றொறு நீதிபதியான அசோக் குமாரும் ஆந்திராவுக்கு மாற்றம் செய்யப்பட்டவர் ஆவார்.

cts

20.3.14 அன்று C.T.செல்வம் நீதிமன்றத்தில் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. சங்கரின் Criminal OP 6051/14 வழக்கில் பிரதிவாதியாக சி.பி.ஐ மட்டுமே உள்ள நிலையில், திமுகவின் வக்கீலும், எம்.பியுமான சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் வக்காலத்து கூட இல்லாமல் ஆஜராகி, சங்கரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

14240401

DMK Advocate Shanmugasundaram

உங்களுக்கு (C.T.செல்வத்துக்கு) இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என்று சொல்ல வேண்டிய தமிழக அதிமுக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஷுன்முகவேலாயுதம் (ஆம் ஷுன்முகவேலாயுதம்), திமுகவால் செட்அப் செய்யப்பட்டு அமைதி காத்தார்.

PP GP1

Tamilnadu Public Prosecutor Shunmugavelayutham (ADMK)

இத்தனைக்கும், இந்த வழக்கு குறித்து தமிழக உளவுத்துறையின் காவலர் பாஸ்கரன், அப்போதைய உளவுத்துறை தலைவர் அம்ரிஷ் பூஜாரி IPSக்கு முன் கூட்டியே தகவல் அனுப்பி,

4c03859a-807e-4ed0-9076-e4ede3da42ed

Intelligence constable Baskaran

அம்ரிஷ் பூஜாரியும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை அனுப்பிய பிறகும், ஷுன்முகவேலாயுதம், இவ்வாறு குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டார்.

393486_139998972773706_1613228824_n

Amrish Pujari IPS – IG (Intelligence) – 2014

மக்களுக்காக வாதாட வேண்டிய சி.பி.ஐ வக்கீல் N.சந்திரசேகரனோ, கனிமொழிக்காக வாயை பொத்திக் கொண்டு இருக்க, சங்கரின் புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், என்ற அடிப்படையான கேள்வியை கூட கேட்காமல் சங்கரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார், C.T.செல்வம்.

தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், உத்தரவின் நகலை கொடுத்தால், மேல் முறையீடு செய்ய உச்சநீதிமன்றம் சென்று விடுவார்களோ என்று அஞ்சி, இரண்டு மாதங்கள் உத்தரவை தராமல் இழுத்தடிக்கவே, நீதிமன்றத்தின் கோடை விடுமுறையான மே மாதம், விடுமுறை கால சிறப்பு அதிகாரியிடம் துட்டு கொடுத்து கள்ளத்தனமாக உத்தரவை வெளியில் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் உத்தரவில், வக்கீல் சண்முகசுந்தரம் அவர்கள், கோபிநாத் என்ற வக்கீல் சார்பாக ஆஜரானதாக பொய்யாக எழுதியதோடு மட்டுமல்லாமல், கோபிநாத் யாருக்காக (கட்சிக்காரர்) ஆஜர் ஆனார் என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாமல் மோசடி செய்துள்ளார் C.T.செல்வம்.

scan0003

scan0004scan0005

scan0006

scan0007

scan0008

அதுமட்டுமல்ல, உயர்நீதிமன்ற இணையதளத்தில் Criminal OP 6051/14 வழக்கின் விபரங்களை பார்க்கையில் சி.பி.ஐயின் வக்கீல் சந்தரசேகரின் பெயரும் இல்லை. வக்கீல் கோபிநாத் பெயரும் இல்லை, வக்கீல் சண்முகசுந்தரம் பெயரும் இல்லை.

jhtrhtrh

சத்யபாமா என்ற பெண் வழக்கறிஞர், எந்தெந்த வழக்குகளில் திமுகவிற்கு ஆதரவாக C.T.செல்வம் செயல்பட்டுள்ளார் என்பதற்கான ஆவணங்களை தொகுத்து அளித்த புகாரில், இணைக்கப்பட்ட வழக்குகள் பின்வருமாறு,

1) அரவக்குறிச்சி திமுக MLA KC.பழனிச்சாமி மகன் KCP.சிவக்குமார் மீதான நில மோசடி வழக்கு,
2) மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு கிரானைட் கொள்ளை வழக்கில் முன் ஜாமீன் வழங்கியது,
3) திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கியது
4) முன்னாள் திமுக அமைச்சர் சுப.தங்கவேலனுக்கு முன் ஜாமீன் வழங்கியது,
5) கிரானைட் கொள்ளை வழக்கில் PRPக்கு முன் ஜாமீன் வழங்கியது,
6) ஜாபர் சேட், தமிழக வீட்டு வசதி துறையை மோசடி செய்த வழக்கு.

scan0005

scan0006

இதே போல், பல வக்கீல்களும் பொது மக்களும் கடந்த பல ஆண்டுகளாக C.T.செல்வம் மீது புகார்கள் அளித்து வந்த பின்னணியில், நானே பலமுறை இது போன்ற மோசடிகள் குறித்து புதிதாக பொறுப்பேற்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறிவிட்டு, இன்று வரை தான் கொடுத்த வாக்குறுதிக்கு நேர் எதிராக செயல்பட்டு வருகிறார்.

Madras-High-Court-Chief-Jus-4-692x1024

Chief Justice Sanjay Kishan Kaul

scan0007

அதுமட்டுமல்லாமல், இந்த CT.செல்வம் கும்பலுடன் இணைந்து குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட துவங்கினார் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்.

நாம் அளித்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டால், திமிரான பதில்களே வரும்.

scan0008

இந்த வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் மட்டும் கேட்டிருந்தால் கூட போதும், சிபிஐ தன் கடமையை செய்து இருக்கும். அப்படி செய்யாமல், ஆரம்ப நிலையிலேயே வழக்கை தள்ளுபடி செய்து, உண்மைகளை மறைத்த காரணத்தால், சங்கர் மீண்டும் பிரசாந்த் பூஷனின் உதவியை நாடி, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, அந்த பெரும் கடலில் தத்தளித்து கொண்டு இருக்கிறது.

இத்தனையும் தாண்டி, சங்கரின் Criminal OP 6051/14 வழக்கில், C.T.செல்வம் 20.3.14 அன்று அளித்த அந்த மோசடி உத்தரவை உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிட விடாமல் மறைத்து இன்று வரை கனிமொழியையும், கருணாநிதியையும் காப்பாற்றி வருகிறார், தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்.

v4rerrwgthtyhy

இவ்வாறாக, துறை ஒதுக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நீதிபதி அருணா ஜெகதீசன் முன் விசாரணைக்கு வர வேண்டிய சங்கரின் Criminal OP 6051/14 வழக்கை, C.T.செல்வம் முன் பட்டியலிட்டு, கருணாநிதியையும், கனிமொழியையும் காப்பாற்றியது இந்த ஒரு வழக்கில் மட்டுமல்ல.

மோசடிகளை தடுக்க வேண்டிய தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்லாமல், இது போன்ற மோசடிகளை தொடர்ந்து நடைபெற உடந்தையாகவும் இருந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் 4 நாட்களுக்கு முன் பிரபாகரன் என்ற இளைஞன், தானும், ஜாபர் சேட்டும், ஆ.ராசாவின் உறவினரான பரமேஷ் குமாரும் சேர்ந்து ஆ.ராசாவின் கூட்டாளியான சாதிக் பாட்சாவை கொலை செய்தோம், என்று ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தோன்றி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடந்த 2G விசாரணையை திசைதிருப்ப கனிமொழியும் கருணாநிதி குடும்பமும் எப்படியெல்லாம் சட்டத்தை வளைத்துள்ளனர் என்பதற்கான சான்று.

உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடந்த ஒரு விசாரணையை இவ்வாறு சர்வ சாதாரணமாக சீர்குலைப்பது, ஆவணங்களை புனைவது, சாட்சிகளை கொல்வது, நீதிபதிகளை மாற்றி தீர்ப்புகளை ஜோடிப்பது, போன்ற செயல்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளும், வக்கீல்களும் ஈடுபடுவது, சட்டத்தின் ஆட்சி இனி நம் நாட்டில் சாத்தியமே இல்லை என்பதையே காட்டுகிறது.

AM Sadiq Batcha Ads

Sadiq Basha’s anniversary poster hinting at betrayal by his benefactors (released by his family).

யாருக்குமே அக்கறை இல்லாத இந்த  சூழ்நிலையில், வாக்குமூலம் அளித்த அந்த வாலிபன் பிரபாகரன் தற்போது எங்கு இருக்கிறான், உயிருடன் இருக்கிறானா என்பது போன்ற எதைப்பற்றியும் கவலைப்படாத நீதிபதிகளும், காவல் துறையும், வழக்குகளை விசாரித்து, இறுதியாக என்ன சாதிக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு அந்த உச்சநீதிமன்றம் கூட விடை அளிக்க முடியாது.

Prabhakaran_Sadiq Batcha

Approver Prabakaran who confessed to Sadiq’s murder on camera

இருப்பினும், நீதித்துறை குற்றமயமாக்குதலை (criminalisation of judiciary) எதிர்த்து, நம் சார்பாக இந்திய தலைமை நீதிபதிக்கு இந்த அறிக்கை.

qazxsw

தமிழக தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலின் மோசடிகள் தொடரும் …

————————————————————————————————————————————-

பின் குறிப்பு 

முதல்  உரையாடல் 23.11.10 – ஜாபர் சேட் மற்றும் கனிமொழி 

ஜாபர் சேட் :  முரசொலி ஆபீஸ்ல…. அங்க கேட்டேன். என்னய்யா… மக்கள்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்டேன்.

கனிமொழி :  ம்ம்.

ஜாபர் சேட் :  என்னன்ணே எல்லாம் அதான் பேசறாங்க.  தலைவர் தங்கமான தலைவரு.. அவரைப்போயி இவ்வளவு கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துட்டாங்க. அவர் பண்ண சாதனையெல்லாம் இப்போ இதாயிடுச்சு இப்போ.

கனிமொழி :  ம்ம்.

ஜாபர் சேட் : என்னய்யா இப்படி முட்டாள்த்தனமா பண்ணியிருக்கான். நான் சொன்னேன்யா அப்ப இருந்தே.. ஏலம் உட்டுட்டுப் போ… ஏலம் உட்டுட்டுப் போன்னு. அவன் கேக்கல.

கனிமொழி :  ம்ம். எப்படி. ஹவ் தே வொர்க் இல்ல..

ஜாபர் சேட் :  ஆமாம் மேடம்.. தட்ஸ் வெரி வெரி…  நான் அதிர்ந்து விட்டேன்.

கனிமொழி :  ஏற்கனவே.. இட் வாஸ் கொயிட்.. ஸ்கூல் எஜுகேஷன் மினிஸ்டரா இருந்தப்போ. ஒன்… திங் ஆப் செலிபிரேஷன் வில் பி தேர் நோ…

ஜாபர் சேட் :  எங்க.. இருந்தப்போ… திருச்சியில.

கனிமொழி :  ஆங்… நோ.. நோ… எதுவும் சொல்ல மாட்டாங்க… பட்.

ஜாபர் சேட் :  மூட் தெரியுமில்ல மேடம்.

கனிமொழி :  திஸ் ஈஸ்… எப்படி இப்படி வொர்க் பண்றாங்க.. நாம எதுக்கெடுத்தாலும் பிராமின்ஸை திட்டறோம்… இவங்க எப்படி வேலை பாக்கறாங்க.

ஜாபர் சேட் :  நாம அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டு அவங்களை வீழ்த்துவோம்.  நேத்து திரும்ப டிவி மேட்டர் வந்தது.

கனிமொழி :  ம்ம்.

ஜாபர் சேட் :  திரும்ப. தலைவர் என்ன சொன்னார்னா யாருமே என்கிட்ட இதை சொல்லலையேன்னு சொன்னார்.

கனிமொழி :  அய்யய்யோ…

ஜாபர் சேட் :  தீக்கதிர்ல ஒரு மோசமான கட்டுரை வந்திருக்கிறதே. அதுல இந்த வோல்டாஸ்… கீல்டாஸ் எல்லாம் இருக்கு. இதெல்லாம் எனக்கு யாருமே சொல்லல. எல்லாத்தையும் மறைச்சிட்டீங்கன்னு சொன்னாரு.  இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கு.  அதையெல்லாம் சரி பண்ணியாச்சு. எல்லாம் சரியாயிடுச்சு. என்னென்ன பண்ணனுமோ பண்ணியாச்சு.

கனிமொழி :  அது அவங்களுடையதே இல்லல்ல… வேற யாருடையதோ அல்லவா அது.

ஜாபர் சேட் :  எது மேடம்?

கனிமொழி :  அதுதான் சட்டப்படி அது அவங்களுடையதே இல்லை அல்லவா (வோல்டாஸ் கட்டிடம் டாட்டாவுக்கு சொந்தமானது அல்ல என்கிறார்)

ஜாபர் சேட் :  சட்டப்படி இல்லைதான்.. ஆனால் ட்ரில் மற்றும்.. அது இல்லாமல் தீக்கதிரில் விரிவாக எழுதியிருக்கிறார்களே… ட்ரில் பற்றி

கனிமொழி :  ட்ரில் என்றால் என்ன ?

ஜாபர் சேட் :  டாட்டா ரீட்டெயில் இன்ஃப்ரா ஸ்டரக்சர்

கனிமொழி :  ஓ.. ஓ.கே.

ஜாபர் சேட் :  வோல்டாஸ் அதன் துணை நிறுவனம் அல்லவா ?

கனிமொழி :  ஆமாம்…

ஜாபர் சேட் :  இந்த நீரா ராடியாவை வாயிலேயே சுடணும்.

கனிமொழி :  இன்னைக்கு யாரோ கேட்டாங்க. அவரது இடத்தில் யாராக இருந்தாலும். அவர்கள்தான் அதற்கு வழி வகை செய்து தந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கும். அந்த இடத்தில் இருந்த இவருக்கு தொலைபேசித் துறை ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிந்திருக்க  வேண்டும். அப்புறம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது..

ஜாபர் சேட் :  அதைத்தான் நானும் சொல்கிறேன்..

கனிமொழி :  நம்மையெல்லாம் அலர்ட் செய்திருக்க வேண்டுமல்லவா ?

ஜாபர் சேட் : எனக்கு என்னவென்றால், நீங்கள் அவரோடு பேசுகிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் உங்களுக்கு உடனடியாக சொல்லியிருப்பேன். அது இல்லாமல் அவருக்குத் தெரியும்.

கனிமொழி :  அப்படியா.. ?

ஜாபர் சேட் :  ஆமாம்.  அவர்கள் சொல்கிறார்கள். நான் உங்களுக்கு சொன்னேன் அல்லவா ?   அவரது தொலைத்தொடர்புத் துறை தலைவர் உளறுகிறார் என்று?

கனிமொழி :  ம்ம்..

ஜாபர் சேட் :  அவருடைய அலுவல்ரீதியான தொலைத் தொடர்பை டேப் செய்திருக்கிறார்கள்.

கனிமொழி : வெகுளியாக இருப்பதற்கான விலையையும் கொடுக்கத்தானே வேண்டும்.

ஜாபர் சேட் :  அவர் வெகுளிதான். அதில் சந்தேகம் இல்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரைப் போன்ற நண்பர்கள் இருக்கும் போது.  ஒரே ஒரு அறிக்கையில் மொத்த விஷயத்தையும் திசை திருப்பி விட்டார்.

கனிமொழி :  அது இயல்புதானே… அவர் அரசியல்வாதி அல்லவா ? எல்லாவற்றிற்கும் பிறகு. அது புத்திசாலித்தனமான அறிக்கையும் கூட. நான் சில சேரிகள் அல்லது கிராமத்திற்கு… அல்லது ஒரு சேரியில் சென்று, இது பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க வேண்டும்.

ஜாபர் சேட் :  அது ஏதோ உரம் அல்லது யூரியா என்று சொல்வார்கள்.

கனிமொழி :   என்ன பண்ணுவது.. ஏதாவது பண்ணி இதை சரி பண்ண வேண்டும் அல்லவா?  அவருக்கும் தெரியும்.

ஜாபர் சேட் : தலைவரின் பிரச்சினை என்னவென்றால் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, தெரியவே தெரியாது என்கிறார்.

கனிமொழி :  எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பிறகு.. குறிப்பாக சொல்ல வேண்டாம் என்று சொல்வார்கள்.

ஜாபர் சேட் :  மேடம்.. நாம் தலைவரிடம் சொன்னோம். குறிப்பாக அந்த பவர் ப்ளான்ட் தொடர்பாக ஒரு பெரிய சோர்சிடமிருந்து…. நாம் அதில் 50 சதவிகிதம் பெற்றுக் கொண்டோம்.  இன்று, தீக்கதிர் பற்றி கேட்கும்போது… வேகமாக கேள்வி கேட்டார். எங்கிருந்து பணம் வருகிறது… யாரிடமிருந்து என்ன கான்ட்ராக்ட் என்று கேட்டார். நான் இதைப் பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் என்று சொன்னேன்.  இல்லை… இல்லை… நீ இது பற்றி சொல்லவேயில்லை என்று சொன்னார். நான் சொன்னேன், அது பற்றிச் சொல்லியிருக்கிறேன்.  இப்போது அவை அனைத்தையும் விற்று விட்டோம் என்று சொன்னேன்.  அவர் எனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னார். நான் என்ன பண்றது?

கனிமொழி :  டிவியைப் பற்றியும் அவர் அதேதான் சொல்கிறார் அல்லவா?

ஜாபர் சேட் :  ஆமாம். டிவியை பற்றியும் யாரும் எனக்குச் சொல்லவில்லை. உடனே டிவியை க்ளோஸ் பண்ணுங்கள் என்கிறார்.

கனிமொழி :  அச்சச்சோ… எப்படிப் பண்றது? டெலிவிஷனையா?

ஜாபர் சேட் :  ஆமாம்…

கனிமொழி :  அதுவும் நல்ல யோசனைதான்.

ஜாபர் சேட் :  நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை.. அதுவாகவே போய்விடும்.

கனிமொழி :  அதற்கு அருகில்தான் இருக்கிறோம்.  டிவியை மூடி விட்டால், நான் பணமில்லாமல் இருக்க வேண்டியது இருக்காது அல்லவா ?

ஜாபர் சேட் :  நான் இன்று மாலை டெல்லி வருகிறேன்.

கனிமொழி :  அப்போது உங்களை நாளை பார்க்கிறேன். முடிஞ்சா… ஏதாவது… நீங்களும் ஒரு அளவுக்கு மேல சொல்ல முடியாது.

ஜாபர் சேட் :  நான் என்ன மேடம்.. நான் சொன்னேன். இதுல சில பி.ஆர். வொர்க் பாக்கலாம். சி.ஏ.ஜி. அறிக்கையிலேயே நமக்கு சாதகமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை ஹைலைட் பண்ணணும்.  நீங்க பண்ண வேண்டியதுதானே என்றார்.  இப்பதான் நமக்கு ஆள் கிடைச்சிருக்கான். டெல்லியில ஆள் கிடைக்கிறதே கஷ்டம்.  டெல்லியில நமக்கு எஸ்டாபிளிஷ்மென்டே கிடையாது. இப்பதான் ஒருத்தன் கிடைச்சிருக்கான். ஸ்டார்ட் பண்றோம் மெதுவா.

கனிமொழி :  எனக்குத் தெரியல… நான் வந்து இறங்குன உடனே… ஆல். செல்வ கணபதியிலேர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் சில பேர் வந்து. எப்படி நீங்க வந்து கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு ஆட்சேபணை இல்லைன்னு சொல்றீங்கன்னு கேட்டாங்க.

ஜாபர் சேட் :  நீங்க அத பாஸ்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம் இல்ல.

கனிமொழி :  என்னங்க நீங்க. ஒன்னும் பேசாம சும்மா போறது கூட பிரச்சினையா போகுதுங்க. வெறும் வதந்தி கூட பிரச்சினையாகுது.

ஜாபர் சேட் :   ஒரு நிமிஷம் மேடம். வேறு தொலைபேசியில் பேசுகிறார்.  கொஞ்ச நேரம் கழிச்சு பேசச் சொல்லுங்க. எஸ் மேடம்.

கனிமொழி :  என்ன பண்றதுன்னே தெரியலை.

ஜாபர் சேட் :  யாராவது ஒருத்தராவது சொல்ல வேண்டும் மேடம். இல்லையென்றால்,இதெல்லாம் பெரிய பிரச்சினையாகும்.

கனிமொழி :  என்ன விஷயம் என்றால், அவர்கள் கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். சுஷ்மா சுவராஜ் ஒரு புத்திசாலி. அவர் பிரதமரிடம் மென்மையாக நடந்து கொள்வார். அவரே, தேவைப்பட்டால் பிரதமரையே ஜே.பி.சி. சம்மன் செய்யச் சொல்வோம் என்று கூறுகிறார்.

ஜாபர் சேட் :  ம்ம்.

கனிமொழி :  இப்போ காங்கிரஸ் உறுதியாக இருக்கிறார்கள். உறுதியாக அது வேண்டாம் என்று.  எப்படி இப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லி விட்டார்கள். இறுதியாக எல்லார் பெயரும் இதில் இழுக்கப்படும்.  பிரதமரையே அழைத்து விட்டால் யாரை அழைக்க மாட்டார்கள்.  காங்கிரஸில் நாராயணனும் அப்படித்தான் சொல்றாங்க. தேர்தலை வைத்துக் கொண்டு எப்படீங்க?

ஜாபர் சேட் :  நேத்து தலைவரிடம் அதுதானே சொன்னோம்.  இதைவிட தெளிவாக தலைவரிடம் எப்படி சொல்ல முடியும்?  டெல்லியில் என்ன நடந்தாலும் சரி, உடனடியாக சி.எம்.மிடம் அதைச் சொல்ல வேண்டும். உங்களுக்கு சொல்லத் தயக்கமாக இருந்தால், வேறு யார் மூலமாவது, அதைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் நாராயணசாமி மூலமாக சொல்ல வேண்டும்.

கனிமொழி :  செல்வகணபதி மூலமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஜாபர் சேட் :  அது நல்ல யோசனை அப்படியாவது செய்யுங்கள்.

கனிமொழி :  அவரு கொஞ்சம் கச கசன்னு பேசிட்றாரு.. நானே கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். சேலத்துக்கு போனப்போ, என்னை ராங் ரூட்லயெல்லாம் இழுத்துட்டு போயி ஒரு மாதிரி பண்ணிட்டாங்க.  நான் தலைவர்கிட்ட இதைப் பத்தியெல்லாம் சொல்லல.  ஆனா, இப்போ அவர் அப்பாகிட்ட பேசும்போது, எல்லாத்தையும் சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஜாபர் சேட் :  ஓ… செல்வகணபதி எதைப் பற்றிப் பேசவும் தயங்க மாட்டார்.

கனிமொழி :  நான் சற்று கவனமாக இருக்க வேண்டும். சரி நாளை உங்களை பார்க்கும் போது பேசுகிறேன்.

ஜாபர் சேட் :  நானும் எம்.பி.யாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  பதினொன்றரைக்கெல்லாம் உங்களுக்கு லீவ் விட்டு விடுகிறார்கள்.

கனிமொழி :  ஜாலி இல்ல…  உங்களுக்குத்தான் நேரம் காலமேயில்ல.

இரண்டாவது   உரையாடல் 31.12.10 – ஜாபர் சேட் மற்றும் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்.

ஜாபர் சேட் : ஜாபர்…

சண்முகநாதன் : சார் வணக்கம்… சண்முகநாதன்.

ஜாபர் சேட் :  சார் பேசிட்டேங்க சார். அவர் மொதல்ல அறுபது பண்ணிட்றேங்கறாராம்.

சண்முகநாதன் :  சரி.

ஜாபர் சேட் :  அறுபதுக்கெல்லாம் ரெடியா இருக்குது. அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துட்றேங்கறாராம்.  அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்டுக்கு போட்டு குடுத்துட்றேங்கறராம். இன்னொரு இருபதுக்கு வழி பண்ணித் தர்றேன்.  உடனே பண்ண முடியாதுங்கறாராம். என்ன சொல்றாருன்னா, அறுபது கன்ஃபர்ம் ஆயிடுச்சு.  நான் சரி அந்த அறுபதுக்கு மொதல்ல வொர்க் அவுட் பண்ணுங்கன்னு சொன்னேன்.  மீதி நாப்பதுக்கு வேற வழி வேணும்னு சொன்னேன். மொதல்ல இருபதை பேசுவோம். நான் இன்னொரு தடவை அவர்கிட்ட பேசிப் பாத்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டு, அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துட்றாருங்க சார். குடுத்து அறுபதை குடுத்துட்றாரு இவங்க கம்பெனிக்கு.

சண்முகநாதன் :  அட்வர்டைஸ்மென்டுனா கரெக்டா இருக்காதே…

ஜாபர் சேட் :  நான் நேரா இப்போ இன்னொரு தடவை பேசிட்றேன் சார். ஈவ்னிங் பேசிட்றேன் சார். அறுபது ரெடி பண்ணிட்டாரு.  அறுபது ரெடி சார். இன்னும் இருபது ரெடி பண்ணிட்றேன்னு சொன்னாரு சார். இன்னொன்னு சொன்னாராம்.  நீங்க பர்மிஷன் வாங்கி சொன்னீங்கன்னா எனக்கு தெரிஞ்சு இன்னொருத்தர் இருக்காரு. அவர் மூலமா இன்னொரு நாப்பது ரெடி பண்ணிடலாம்னு சொன்னாரு.  அது யாருன்னு போன்ல வேணாம். நான் நேரா பாத்துட்டு ஈவ்னிங் சொல்றேன் சார். தேங்க்யூ சார்.

சண்முகநாதன் :  தேங்க்யூ.

மூன்றாவது உரையாடல் 13.2.11 – ஜாபர் சேட் மற்றும் ஷரத் ரெட்டி.

ஜாபர் சேட் : ஷரத்… ஷரத்…

வினோதகன் :  ஷரத்தும் அமிர்தமும் இருக்காங்க.

ஷரத் ரெட்டி :  ஹலோ

ஜாபர் சேட் :  ஷரத் உங்கள் போன் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறதே..

ஷரத் ரெட்டி : ஆமாம் சார்… நான் போனை காரிலேயே வைத்து விட்டேன். தலைவர் வீட்டுக்கு வந்துள்ளேன்.

ஜாபர் சேட் :   ஓ.கே… ஓ.கே…

ஷரத் ரெட்டி :  சார். அந்த சினியுக் ஆட்கள் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அழைத்தார்கள். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, அனேகமாக இந்த வாரம் வந்து விடுவார்கள். இந்த முறை கேள்விகளோடு வரமாட்டார்கள். வந்து இயக்குநர்களை கைது செய்து விடுவார்கள்.  அதனால் தயாராக இருக்குமாறு சொன்னார்கள். நான் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், பாஸ், எங்கள் தகவல் 100 சதவிகிதம் சரி.  உங்கள் தலைவரிடம் சொல்லி விடுங்கள்.  நான் இது மதியம் என்பதால் சொல்ல முடியாது என்று கூறினேன். இதை எப்படி கையாள வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.  இது மதியம் என்பதால் சொல்ல முடியாது என்று சொன்னேன்.  சரி… அதை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.  இதைத்தாண்டி எங்களால் எதுவும் சொல்ல முடியாது.

ஜாபர் சேட் :   போன முறை கூட அவர்கள் இதைத்தானே சொன்னார்கள்…

ஷரத் ரெட்டி :  போன முறை அவர்கள்…… (குரல் தெளிவில்லை)

ஜாபர் சேட் :   டிவி அலுவலகத்துக்கு வருவார்கள் என்று சொன்னார்கள், நினைவிருக்கிறதா ?

ஷரத் ரெட்டி :  ஆமாம்… இப்போதும் சொன்னார்கள். எல்லாம் தயாராக இருக்கிறது. இப்போது கைதுக்கு தயாராகிறார்கள்.  விசாரணைக்கு அல்ல.  கைதுக்கு.  ஆகையால் இது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  நீங்கள் உங்கள் சோர்ஸ்களில் விசாரித்து விட்டு, இதை உறுதி செய்யுங்கள்.  அமிர்தம்(கலைஞர் டிவியின் ஒரு இயக்குநர்) சாரை அழைத்தேன்  ஒரு விழாவுக்கு போய் விட்டார்.  ராமநாராயணன் பேத்தியின் விழா.  முதலில் அவர் இதை விட்டு விடு என்றார். பிறகு முதலில் சண்முகநாதன் சாரிடம் சொல்லுங்கள் (கருணாநிதியின் உதவியாளர்) என்றார்.  அப்போது நான் உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். நாங்கள் இங்கே வருகிறோம் என்று.  இங்கே வந்த பிறகு சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம். பிறகு மீண்டும் வரச் சொல்லி தொலைபேசி அழைப்பு வந்தது.

ஜாபர் சேட் :   இல்லை. நான்தான் சண்முகநாதனிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னேன்.  முதலில் நாம் இதை சரி பார்க்க வேண்டும்.

ஷரத் ரெட்டி : கரெக்ட் சார். முதலில் நாம் சரி பார்த்து 100 சதவிகிதம் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். இப்போதுதான், சிதம்பரம் மற்றும் மொத்த காங்கிரஸ் ஆட்களும் வந்துள்ளார்கள்.  அதனால் நாங்கள் காத்திருக்கிறோம்.  டி.ஆர் பாலு சார், அவர் இதை பார்த்துக் கொள்வதாக சொன்னார். இதுதான் இப்போதைய நிலை.

ஜாபர் சேட் :   தலைவரிடம் சொல்லும்போது, என்னிடமும் இதை சொல்லி விட்டதாக சொல்லுங்கள்.

ஷரத் ரெட்டி : நன்றி சார்.  நன்றி.

ஜாபர் சேட் :   நானும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன்.  50-50 சான்ஸ்தான் இருக்கிறது. யாரும் உறுதி செய்ய மாட்டேன் என்கிறார்கள். வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார்கள்.  இரண்டு மூன்று லாஜிக் சொல்கிறார்கள்.  ஒன்று, மூத்தவர்களைத்தான் முதலில் கை வைப்பார்கள் என்று சொல்கிறார்கள்.

ஷரத் ரெட்டி : கரெக்ட் சார்.

ஜாபர் சேட் :   அது நடக்கவில்லை.  அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்யலாம். அப்போதுதான் அந்த திசையில் பார்க்க மாட்டார்கள் என்பதற்காக.  பரிவர்த்தனை விபரங்களை தெரிவித்து விட்டோம். அவர் இயக்குநர் இல்லை என்பதையும் (கனிமொழி) தெரிவித்து விட்டோம்.  அவர் பங்குகளை மட்டுமே வைத்துள்ளார்.  மற்றொரு இயக்குநனர் அங்கே இல்லை.  இது போன்ற விவகாரங்கள்… ….

ஷரத் ரெட்டி :  சார்.. அந்த பரிவர்த்தனை நடக்கையில் அவர் (கனிமொழி) அங்கே இருந்தார்.  அதுதான்…

ஜாபர் சேட் :   என்ன…? என்ன…?

ஷரத் ரெட்டி : சார் பரிவர்த்தனை நடந்தபோது அவர் அங்கே ஒரு இயக்குநர்.

ஜாபர் சேட் :   உண்மையாகவா ?

ஷரத் ரெட்டி :  ஆமாம் சார்.

ஜாபர் சேட் :   அன்றைக்கு இல்லை என்று சொன்னீர்களே…

ஷரத் ரெட்டி : சார் அவர் டிசம்பர் மாதத்தில் இயக்குநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்  எல்லாம் பழைய தேதிகள் சார்.  நான் இப்போது உட்கார்ந்து சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஜாபர் சேட் :   இல்லை.. டிசம்பரில் ராஜினாமா.  அது உள்ளே வருகிறதா என்ன?

ஷரத் ரெட்டி : சார். பணம் 2008ல்தானே வந்தது?

ஜாபர் சேட் :   ஓ… இந்த டிசம்பரில்தானே அவர் ராஜினாமா செய்தார். எந்த டிசம்பர்?

ஷரத் ரெட்டி : ஆமாம் சார்.  இந்த டிசம்பரோ… போன டிசம்பரோ… ஆனால், அவர் அந்த காலகட்டத்தில் இயக்குநராக இருந்தார்.  நான் ஒரு 100 பக்கங்களை

பின்தேதியிட்டு நேற்றுதான் கையெழுத்திட்டேன்.  எல்லாவற்றையும் நகல் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஜாபர் சேட் :   ம்ம்.

ஷரத் ரெட்டி : பிரச்சினை என்னவென்றால், நாம் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம்.  பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதற்கு தகுந்தாற் போல, ஆவணங்களை திருத்துகிறோம் (Manipulating). அதனால் பக்கங்கள் மாற்றப்படுகின்றன.

ஜாபர் சேட் :   ம்ம்..

ஷரத் ரெட்டி : கனி மேடம் 2007-ல் இல்லை.  2007-க்குப் பிறகு பெரியம்மா (தயாளு அம்மாள்) இருந்தார்.

ஜாபர் சேட் :  பெரியம்மா இருந்தது எனக்குத் தெரியும்.  அவருக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது என்பதால் அவர் இருந்தார்.

ஷரத் ரெட்டி : கரெக்ட்… கரெக்ட்…

ஜாபர் சேட் :   அவரை இதோடு அவர்களால் இணைக்க முடியாது. இல்லையென்றாலும் கூட, அந்தப் பரிவர்த்தனை உண்மைதானே.. அது வெளிப்படையான பரிவர்த்தனை.  காசோலை மூலமாக நடந்தது.

ஷரத் ரெட்டி : அது சரிதான் சார்.  ஆனால், எந்த கோணத்தில் இது போகப்போகிறது என்பதுதான் கேள்வி.

ஜாபர் சேட் :   அதைத்தான் நான் சொல்கிறேன்.  என்னுடைய ஆட்கள், என் சோர்ஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இது சிக்கலாகக் கூடியது.  அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.  முதலில் விசாரணை செய்வார்கள்.  அது நடந்தாலும் கூட, விசாரணையில் அவர்கள் திருப்தி அடையாவிட்டால், இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று அவர்கள் நினைத்தால்… கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தால்.. அல்லது சாட்சிகளை அழித்து விடுவீர்கள் என்று நினைத்தால், அப்போதுதான் அதற்காக (கைது) போவார்கள்.

ஷரத் ரெட்டி : அதற்குப் பிறகு ரொம்பவும் தீவிரமாக இருப்பார்களே…

ஜாபர் சேட் :   ஆமாம்.

ஷரத் ரெட்டி : நான் உங்களிடம் சொல்லி விட்டேன்.  நீங்கள் சண்முகநாதன் சாரிடம் பேசுங்கள்.  இதை அவரிடம் சொல்லுங்கள். தமிழில் சொல்லுங்கள். என்னை விட நீங்கள் சொன்னால் பெட்டராக இருக்கும்

ஜாபர் சேட் :   சரி… சரி…. நான் சொல்கிறேன்.  நீங்கள் தலைவரைப் பாருங்கள். இதையும் சொல்லுங்கள்.  நான் மாலையில் தலைவரிடம் சொல்லுகிறேன்.

ஷரத் ரெட்டி : ஓகே சார்.. நன்றி சார்.

நான்காவது உரையாடல் 16.02.2011 – ஜாபர் சேட் மற்றும் கனிமொழி 

(இந்த உரையாடல் நடைபெறும்போது, தமிழக மீனவர்களுக்காக இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு கனிமொழி கைதாகியிருந்தார்.)

கனிமொழி :  ஹாங் சொல்லுங்க.

ஜாபர் சேட் : சொன்னா என்னை உதைப்பீங்க.. இருந்தாலும் சொல்றேன். (சிரிக்கிறார்)

கனிமொழி :  பரவாயில்ல சொல்லுங்க.

ஜாபர் சேட் :  ரெண்டாவது முறையா கஸ்டடியில் இருக்க ஆளுக்கிட்ட நான் பேசிக்கிட்டு இருக்கேன்.

கனிமொழி :   நானாவது உங்கள் கஸ்டடியில் இருக்கிறேன்..

ஜாபர் சேட் :  மேடம் நான் அந்த அறிக்கையை அப்படியே படிக்கிறேன்.  சரியாக இருக்கிறதா? என்று சொல்லுங்கள். நான் தலைவரிடம் சொன்னேன்.  அவர் சரி என்றார். நீங்கள் சரியாக இருக்கிறதா? என்று சொல்லுங்கள்.

கனிமொழி  : 10.02.2011 அன்று நான் விடுத்த அறிக்கையில் 2007-2008-ஆம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கிய 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009-ஆம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்றும், சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாகப் பெறப்பட்ட 200 கோடி ரூபாய் திருப்பித் தரப்பட்டு விட்டது என்றும், அதற்கு வட்டியாக 31 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும், இந்த பரிவர்த்தனைகள் அத்தனையும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு விட்டது என்றும் அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டது என்றும்,  தெரிவித்திருந்தேன். இதற்குப் பிறகும், இந்தக் கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே, மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்த விதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போ வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளை சரிபார்த்து தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். அதற்கு எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. சரத்குமார், நிர்வாக இயக்குநர், கலைஞர் தொலைக்காட்சி.

கனிமொழி : நாமாக முன் வந்து தெரிவித்தது போல ஆகி விடும்.  நல்லது.

ஜாபர் சேட் : ஆமாம் மேடம்.

கனிமொழி :   மீசையில மண் ஒட்டலன்னா கூட,

ஜாபர் சேட் :   பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் என்றால், இவர்கள்தான் வெளிப்படையாக இருக்கிறார்களே.. என்று நினைப்பார்கள்.

கனிமொழி :  நாமும் அவர்களை அதற்கு தயார்ப்படுத்துகிறோம் அல்லவா ?

ஜாபர் சேட் :  ஆமாம் மேடம். ஒரு பத்து பர்சென்ட் பேர் இது எல்லாம் செட்டப்புன்னு சொல்லுவான்.  அதை எப்படியும் சொல்லத்தான் போறான். அட்லீஸ்ட் 70 பர்சென்ட் பேரு கலைஞர் டிவி சர்ப்ரைஸ்ட் னு சொல்றதுக்கு பதிலா, நாம ஏற்கனவே திறந்த புத்தகம்னு சொல்றோம்.. வாசிச்சிட்டு போங்கன்னு சொல்றோம். இப்போ படிச்சுட்டு போங்க நாங்க லைப்ரரின்னு சொல்றோம்.

கனிமொழி :  ஆமாம்… ஆமாம்…

ஜாபர் சேட் : நான் தலைவர்கிட்ட இந்த ஐடியாவை சொன்னேன்.  இது முந்தையதை விட பெட்டர் இல்லையா மேடம்…

கனிமொழி :  நிச்சயமாக  அவர் என்னமோ தமாஷாக பேசிக்கொண்டு இருக்கிறார்.  இப்போது வருவார்கள்.. அப்போது வருவார்கள். யாருக்கும் தெரியாது.. என்று அவர் கூறுகிறார்.

ஜாபர் சேட் : அவர்கள் (சிபிஐ) முன்னதாகவே சொல்லி விட்டுத்தான் வருவார்கள் மேடம்.

கனிமொழி :  ஆமாம்.. அதுவும் சரிதான்.     நம்ப ஆளுங்களா இருப்பாங்க வேற..

ஜாபர் சேட் :   நாளைக்கு எல்லாரும் போட்ருவான்.. சிபிஐ விசாரணைக்கு சரத் குமார் தயாருன்னு…

 கனிமொழி :   எந்த சரத்துன்னு கரெக்டா போடச் சொல்லுங்க.

ஜாபர் சேட் :   நான் என்ன கீழ நாடார் பேரவைன்னு போட்றவா மேடம்.. கீழ இவர் ஊனமுற்ற சரத் குமார்னு சொல்லட்டா மேடம்.

கனிமொழி :  ஊனமுற்ற இல்ல… மாற்றுத் திறனாளி..

ஜாபர் சேட் :  சாரி மேடம். எங்க ஊர்ல எல்லாம் மேடம்.. எங்க டிபார்ட்மென்டுல ஒரே பேர்ல ரெண்டு பேர் இருந்தானுங்கன்னா அவனுங்களுக்கெல்லாம் அடை மொழி கொடுத்துடுவோம். ஃபார் எக்சாம்பிள் மாலைக்கண் சுரேஷ், ப்ளேடு ரவி அப்படி.  அது மாதிரி இவனுக்கு ஒத்தக் கால் சரத்னு குடுத்துடுவோம்.

கனிமொழி :  நீங்க கஸ்டடியில எடுத்தாவது அவனை காப்பாத்துவீங்கன்னு நெனைச்சா அதுவும் இல்லாம போயிடுச்சு.

ஜாபர் சேட் :   மேடம் யு ஆர்  தி ஒன்லி கார்டியன் ஏஞ்சல் டு ஹிம். நான் சிறு அளவில் உதவி செய்கிறேன். அவ்வளவுதான்.

கனிமொழி :  பாவம் ஆனா. நீங்க வேற..

ஜாபர் சேட் :  நான்தானே மேடம்.

கனிமொழி : நீங்களும் அவரும்… ரெண்டு பேரும் சேத்து.    இங்க பி.எஸ் ஸ்கூல்ல வச்சிருக்காங்க.

ஜாபர் சேட் :   அது உங்களுக்கு வசதியாக இருக்கிறதா.. அல்லது வேறு இடம் ஏற்பாடு செய்யச் சொல்லவா ?

கனிமொழி :  இல்ல இல்ல. இட்ஸ் ஓகே.  மரமெல்லாம் இருக்கு.

ஜாபர் சேட் :  லன்ச் எப்படி மேடம்?

கனிமொழி : அவங்க ஏற்பாடு செய்வாங்கள்ல..

ஜாபர் சேட் : அது ஓகே மேடம்.  உங்களுக்கு ?

கனிமொழி :  போதும்… போதும். இதுவே போதும்.  நான் மட்டும் தனியாக சாப்பிட்டால் ஒரு மாதிரியாக இருக்கும் அல்லவா ?

ஜாபர் சேட் :  இந்த கல்யாண மண்டபத்துக்கு மட்டும் ஏதாவது ஸ்பெஷலா ஆர்கனைஸ் பண்ணச் சொல்லிடலாம்.

கனிமொழி : நீங்கதான் ஏற்பாடு செய்வீங்களா.. இவங்க பண்ண மாட்டாங்களா?

ஜாபர் சேட் : அவங்கன்னா யாரு டி.எம்.கே.லயா?

கனிமொழி :  ஆமாம்.

ஜாபர் சேட் :  நோ… நோ… கஸ்டடியில இருக்கும்போது, லன்ச் வழங்குவது அரசின் கடமை.   உங்கள் தகவலுக்காக ஒரு விஷயம்.  இது குறித்து நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஏனென்றால், ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு அரசு வழங்கும் தொகை வெறும் பத்து ரூபாய்.

கனிமொழி :   எங்கயுமே சாப்பாடு வாங்கிக் கொடுக்க முடியாதே…

ஜாபர் சேட் :  ஆமாம். அதனாலதான் எங்க ஆளுங்க இது மாதிரி நெறய்ய அரெஸ்ட் இருக்கும்போது, வெளியில போய் வாங்கித் தர்றாங்க. சரவண பவனை மொட்டையடிச்சிடுவானுங்க.

கனிமொழி :  அது நல்ல விஷயம்தான்.

ஜாபர் சேட் :  ஆமாம். எங்க ஆளுங்க போயி நீ குடுக்குறியா… இல்லை உனக்கு சாப்பாடு தரவான்னு கேப்பானுங்க.

கனிமொழி :  பத்து ரூபா ரொம்ப அநியாயம் இல்ல?

ஜாபர் சேட் :  ஆமாம் மேடம்.  நீங்க ஏதாவது பண்ணுங்க…

கனிமொழி :  பேசாம நீங்களே ஒரு கிச்சன் ஆரம்பிச்சிடுங்களேன்..

ஜாபர் சேட் :  மேடம் என்னோட ஆலோசனையும் அதுதான்.  காவல்துறையினருக்கும், கைதாகுபவர்களுக்கும் சேர்த்து. ஆனால், டி.ஜி.பி. ஒத்துக் கொள்ள மாட்டேன்னுட்டாங்க.

கனிமொழி :  ஆமாம் அது நல்ல யோசனை.

ஜாபர் சேட் : நான் டி.ஜி. ஆகும்போது பண்ணிட்றேன் மேடம். நீங்க மறக்காம என்னை டி.ஜி.பி. ஆக்குங்க.

கனிமொழி : நீங்கதான் என்னோட எதிர்காலத்தை சொல்றேன்னு இருக்கீங்களே…

ஜாபர் சேட் : நான் சொல்லிட்டேன் மேடம்.. என்னது.  மன்னர் வழி ஆட்சிதான்.

கனிமொழி : அதெல்லாம் வேண்டாம்.  நான் வீட்டுக்கு வந்ததும் அதுல பேசறேன்.

ஜாபர் சேட் : ஓகே மேடம்.

————————————————————————————————————-

Share Button