ஜனவரி 21ம் தேதி (21.1.16) கள்ளக்குறிச்சி SVS மருத்துவ கல்லூரியில் 3 மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை/கொலை செய்து உயிரை நீத்தனர்.

12573715_576283529189755_4442664993609976383_n

12565512_593177620829433_1565119125186831496_n

12592333_593177804162748_7692350091802188575_n

12644773_10207781280307853_8112176083825769720_n

12642903_1670854363197038_4922261011998251900_n

12552742_1111270675573328_2370153797887572858_n

12512616_1111270162240046_8183100494309453312_n

12540818_1111269908906738_698580953429777538_n

அரசுகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், போன்றோரை குறை சொல்லி காரணம் கண்டுபிடிக்கும் நாம், உண்மையான குற்றவாளிகளை என்றுமே கண்டுகொள்வதில்லை, தெரிந்தாலும் சொல்வதற்கு பயம். ஏனெனில் இன்றைய குற்றங்கள் யாவுமே நீதித்துறையால் அரங்கேற்றப்படுபவை.

இந்த கல்லூரியை பொறுத்தவரை, அரசுகள் வழக்கம் போல தத்தம் ஊழல்களை செய்திருந்தாலும், நிர்வாக ரீதியான நடைமுறைகளால் கல்லூரி நடக்க அனுமதி கிட்டவில்லை. 6 உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கடமை தவறிய காரணத்தாலும், திமிராலும், உடந்தையாலும் தான் இந்த நிலைக்கு இந்த பிரச்னை வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த 3 மாணவிகளும், அவர்களின் குடும்பத்தாரும் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்கள் குடும்பத்தினர், பொது மக்கள் ஆகியோர் கடந்த 2008ம் ஆண்டு முதல், பல விதத்தில் பாதிப்பு அடைந்துள்ளனர்.

11226549_1632787970321602_5939369188199032969_n

svs-college-3

இப்போது நீதித்துறையின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளை பார்க்கலாம். 3 மாணவிகள் சாவுக்கு காரணமாக இருந்த முதல் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சந்துரு அவர்கள். SVS கல்லூரியின் முதல் வழக்கு ஜூன்/ஜூலை 2012ம் ஆண்டு விசாரனைக்கு வந்தது. மாநில அரசு கல்லூரிக்கு அனுமதி அளித்த பிறகும்,மத்திய அரசு ஆய்வு (Inspection) செய்து கல்லூரி நடத்த அனுமதி மறுத்துள்ளனர் என்றும் அந்த முடிவை எதிர்த்து, மீண்டும் ஆய்வு (re-inspection) செய்து கல்லூரிக்கு அனுமதி அளிக்க உத்தரவிடுமாறு கோரி இருந்தனர் கல்லூரி தரப்பினர்.

justice-chandru

CHANDRU

இந்த வழக்கை விசாரித்த சந்துருவிடம், மத்திய அரசு கீழ்கண்ட தகவல்களை தெரிவித்தது.

1)    28.02.11 – மாநில அரசு அனுமதி (NOC) அளித்தது.

2)    27.04.11 – கல்லூரி நிர்வாகம் மத்திய அரசிடம் அனுமதி கோரியது.

3)    23.07.11 – மத்திய அரசு கல்லூரியை ஆய்வு செய்தது.

                                                          ஆய்வின்  போது

(A)  6 வகுப்பறைகள் இருப்பதாக கல்லூரி தரப்பில் கூறியிருந்தாலும், ஒரே ஒரு வகுப்பறை மட்டுமே இருந்தது.

(B)  43 ஆசிரியர்கள் இருப்பதாக கல்லூரி தரப்பில் கூறியிருந்தாலும், 11 ஆசிரியர்களே இருந்தனர்.

(C) அந்த 11 பேரும் 24.02.11ம் தேதி கல்லூரியில் பணிக்கு சேர்ந்ததாக கல்லூரி தரப்பில் கூறியிருந்தாலும், அவர்களின் பணி நியமன ஆணையே, 14.02.11ம் தேதி தான் வழங்கப்பட்டுள்ளது.

(D) மீதமுள்ள 21 ஆசிரியர்களின் பணி கடிதமும் (Offer Letter), பணியில் சேர்ந்த தேதியும்,  ஒரே நாளில் காட்டப்பட்டுள்ளது.

(E) 43 ஆசிரியர்களும், கல்லூரியில் பணிக்கு சேர்ந்துள்ளனர் என கல்லூரி தரப்பில் காட்டினாலும், அவர்களின் வருகை பதிவேடும், பிரமாண பத்திரமும் ஆஜர்படுத்த கல்லூரியால் இயலவில்லை.

(F) ஆதலால் கல்லூரியால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களுமே போலியானது, புனையப்பட்டது (FORGED & FABRICATED).

(G) 58 மருத்துவமனை ஊழியர்கள் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தாலும், 13 பேரின் சேர்க்கை கடிதத்தில் அவர்களின் கையெப்பம் இல்லை.

(H) A.செல்வராஜ் என்ற நபர் 14.02.10ம் தேதி கல்லூரியில் வேலைக்கு சேர்ந்ததாக கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தாலும் ,அவரின் பணி நியமன ஆணையே 14.02.11ம் தேதிதான் வழங்கப்பட்டுள்ளது. வருகை பதிவேட்டிலும் அவர் பெயர் இல்லை.

(I) 50 பேர் மருத்துவமனையில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருந்தாலும், கல்லூரி நிர்வாகத்தால் 15 பேரையே ஆஜர் செய்ய முடிந்தது.

(J) பரிசோதனை கூடம் (Labல்) 470 கருவிகள்/உபகரணங்களுக்கு பதிலாக வெறும் 217 மட்டுமே இருந்தது

(K)  மியூசியம், பரிசோதனை கூடம், நூலகம், ஆபரேஷன் தியேட்டர், மருத்துவர்கள் தங்கும் வசதி போன்றவை , இல்லவே இல்லை.

(L)  அதே போல் pathology/microbiology, community medicine, surgery, gynaecology, ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.

(M) 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில், 8 நோயாளிகளின் ஆவணங்களை (Case-Sheets) ஆய்வு குழு ஆராய்ந்தது. இரண்டில் படுக்கை எண் குறிப்பிடபடவில்லை. பரிசோதனைக்கூட அறிக்கை (lab reports) 8 பேருக்கும் வெற்றுத்தாளாக உள்ளது.

(N) ஆகவே இந்த அனைத்து ஆவணங்களுமே போலியானது.

(O) எனவே 20 கற்றுத்தரும் ஆசிரியர்களும், 53 பணியாளர்கள் கொண்ட மருத்துவமனையும், தாங்கள் நடத்தி வருவதாக கல்லூரி நிர்வாகம் கூறுவதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இறுதியாக கல்லூரிக்கு அனுமதி வழங்குமாறு கேட்ட விண்ணப்பத்தை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம் அன்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த மக்கள் விரோத நீதிபதி சந்துரு, மேலே கூறிய அனைத்தையும் தன் தீர்ப்பில் சொல்லிவிட்டு, கல்லூரியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடாமல் வழக்கை தள்ளுபடி செய்தார்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படை கோட்பாடான பிரிவு 39ன் கீழ் எந்த குடிமகனும் தன் கவனத்துக்கு வரும் குற்றத்தை சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அதை மறைத்ததே ஒரு குற்றமாகும். ஆவண மோசடி, ஆள் மாறாட்டம், forgery, fraud போன்ற இத்தனை குற்றங்கள் நடந்தை அறிந்து வழக்கு கோப்புகளை முழுமையாக பார்வையிட்டு தன் தீர்ப்பில் சொல்லி, எந்த ஒரு நடவடிக்கைக்கும் உத்தரவிடாத நீதிபதி சந்துருவை இந்த கொலை/தற்கொலை வழக்கில் கடமை தவறிய உடந்தை குற்றவாளியாக சேர்ப்பதே சட்டமாகும்.

தமிழக அரசின் சார்பில், அதாவது, MGR மருத்துவ பல்கலைகழகத்தின் வக்கீலான நர்மதா சம்பத் இந்த வழக்கில் பதில் மனு கூட தாக்கல் செய்யாமல், பீஸ் மட்டும் வாங்கிக்கொண்டார்.

pr090413d_0

NARMADHA

சந்துருவையும், நர்மதாவையும், என்ன செய்யலாம்?

 

அடுத்த பதிவில்

சந்துருவாவது சலுகை காட்டவில்லை.

இன்னொறு நீதிபதி அடுத்த ஆண்டு (2014-15) கல்லூரிக்கு  அனுமதி அளிக்குமாறு
உத்தரவே இட்டுள்ளான்.
அந்த பொறுக்கியின் கதை நாளை வெளியீடு.
Share Button