பிற்படுத்தப்பட்டோரும், தலித்துகளும்  இட ஒதுக்கீட்டின் மூலம் (தமிழகத்திலாவது) மறுமலர்ச்சி அடைந்துள்ளனர், என்ற மாயையை உருவாக்கும் பார்ப்பனிய மைனாரிட்டியினர், உண்மையிலேயே தில்லியிலும் / சென்னையிலும் அமர்ந்து கொண்டு அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நிர்வாக நடைமுறை ரீதியாக மோசடிகள் செய்து, இட ஒதுக்கீட்டின் பலன்களை, பார்ப்பனர்களுக்கே கிடைக்குமாறு திருத்தியமைத்துள்ளனர். இந்திய தேசத்தில் முக்கிய பதவிகளான கவர்னர்கள், உச்சநீதிமன்ற / உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியவற்றின் தேர்வு முறையை யாருக்கும் புரியாதவாறு புனைந்து, பார்ப்பனர்களை அந்தப் பதவிகளில் அமர்த்தி, தீண்டத்தகாத பிற்படுத்தப்பட்டோரையும், தலித்துகளையும், நிரந்தரமாகவும், மறைமுகமாகவும் பார்ப்பனர்களே ஆள வழி வகை செய்துள்ளனர். இதன் காரணமாகவே, எவ்வளவோ போராடியும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியும், நீதிபதி நியமனம் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளின் தேர்வுமுறை சூத்திரத்தை ராணுவ ரகசியம் போல் பாதுகாத்து வரும் பார்ப்பனர்களுக்கு, தோள் கொடுத்து இந்நாட்டின்  உச்ச நீதிமன்றம் உதவுகிறது.

நீதித்துறையில், இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளைத் தவிர, பார்ப்பனிய நீதிபதிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவற்றில் ஒரு சிலர் கற்றறிந்தவர்களாக இருந்தனர், வேறு சிலர் மனிதாபிமானத்துடன் இருந்தனர். ஆனால் தங்களின் அறிவாற்றலை, தேச நலனுக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ எந்த நீதிபதியும் பயன்படுத்தியதில்லை. தேச நலன் என்பது அவர்களை பொறுத்தவரை மனுதர்ம சாஸ்த்திரத்தின்படி பார்ப்பனிய நலனே தவிர, நாட்டின் நலனோ,  மக்களின் முன்னேற்றமோ அல்ல. சிந்தனை, செயல் அனைத்தும் சாதிய ஆதிக்கத்தை நிலை நிறுத்த மட்டுமே பயன்படுத்தினர்.

இத்தனை ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் நீதித்துறை தீர்ப்புகளில் மக்களுக்கோ, நாட்டுக்கோ பயன் அளித்த தீர்ப்பு என்று ஒரு  தீர்ப்பை கூட எடுத்து  காட்ட இயலாது. அத்தனையும் லார்டு, துரை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நீதிபதிகளின் வளர்ச்சியையும் மேன்மையையும் மையமாக வைத்து எழுதப்பட்ட தீர்ப்புகளே ஆகும். 2014-15ம் ஆண்டுகளில் வரும் தீர்ப்புகளில் கூட மக்களை மன்னரின் அடிமைகள் (Subjects) என்ற வார்த்தைகளை குறிப்பிட்டுத்தான் இன்றைய  உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு எழுதுகின்றனர். ஷா பானோ போன்ற,  மக்கள் நலனை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட ஓரிரு தீர்ப்புகள் கூட வெற்று காகிதமாகத்தான் இருந்ததே தவிர, இந்திய நீதித்துறையால், நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் இல்லை.

மறு பக்கம் மைனாரிட்டி ஆட்சிகள் மத்தியில் உருவாகி, அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூற, அவர்களின் குடுமி நீதித்துறையின் பிடியில் சிக்கிக் கொண்டது. அரசியல் சதுரங்கத்தில் ஒருவரை உருவாக்கவும், அழிக்கவும், எப்படி வேண்டுமானாலும் தீர்ப்புகளை எழுதி, எவ்வளவு வேண்டுமானாலும் (முக்கியமாக எவ்வளவு குறைவாக  வேண்டுமானாலும்) தண்டனைகளை வழங்கலாம், என்ற நிலைக்கு நீதித்துறை தரம் தாழ்ந்தது. அரசியல்வாதிகளின் ஊழல் போக்கும், ஊழலை அரசியல் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக பயன்படுத்தும் நடைமுறையும் அதிகரித்த அதே வேளையில், பாராளுமன்றம் சட்டங்கள் இயற்ற இயலாமல் முடங்கி போனதால், நீதித்துறையின் எல்லை விரிவடைந்தது. வாய்ப்பைப் பயன்படுத்திய இந்திய நீதிபதிகள் தனக்கு தானே தீர்ப்புகளை எழுதி, சட்டங்களை மாற்றத் தொடங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்புகள்தான் இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் தாண்ட கூடாது என்றும், நீதிபதிகளை நாங்களே நியமித்துக் கொள்வோம் என்றும், நீதிபதிகள் கொலை செய்தாலும், கொள்ளை அடித்தாலும், தலைமை நீதிபதி உத்தரவு இல்லாமல் அவர்களை கைது செய்ய கூடாது என்றும் சட்டதிற்கு முரணான தீர்ப்புகள் வழங்கி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பறித்தனர்.

எவ்வித எதிர்ப்போ தயக்கமோ இன்றி அரசுகளும், அதிகாரிகளும் இது போன்ற சட்ட விரோத தீர்ப்புகளை ஏற்று, கடந்த 20 முதல் 22 ஆன்டுகளாக அடிமை ஆட்சி நடத்தினர். அதிகாரம் நீதித்துறையின் பிடியில் கைமாறிய காரணத்தால், நீதிபதிகள் ஊழலில் திளைத்தனர், கொழித்தனர், கொழுத்தனர். கொள்ளை அடித்த பணத்தை பாதுகாக்க நீதிபதிகளுக்கு கிரிமினல்களின் சகவாசம் தேவைப்பட்டது. கிரிமினல் வழக்குளை கையாளும் வழக்கறிஞர்களை இடைத்தரகர்களாக்கி, குற்றவாளிகளுடன் உறவாடினர். பல கோடி ருபாய் மோசடி செய்து பிழைக்கும் குற்றவாளிகளுடன், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த குற்றவாளிகளுடனும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்து  வெளிநாடுகளில் உல்லாசமாக சுற்றித்திரிந்தனர்.

நீதிபதிகளின் தயவு குற்றவாளிகளுக்கு தேவைப்பட்டதாலும், நீதிபதிகளின் ரகசியங்கள் குற்றவாளிகளுக்கு தெரிந்ததாலும், கொலை வழக்குகளில் கூட, ஏதோ ஒரு காரணத்தை கூறி குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

Capture

நீதிபதிகளுக்கும்  குற்றவாளிகளுக்குமிடையே இருந்த கூட்டுறவு (nexus), அதிகரித்ததன் விளைவு, நீதிபதிகளாக  யார் நியமிக்கப்பட வேண்டும், என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை, குற்றவாளிகள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர். 

இந்த  குற்றவாளிகளில் 90 சதவீதம் பேர், ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் சென்று போலியான வழக்கறிஞர் பட்டங்களை விலைக்கு வாங்கி வந்தனர். அவர்களுக்கு வேண்டிய வழக்கறிஞர்களுக்கு வழக்குகள் அனுப்பியும்,  சாதகமான தீர்ப்புகள் கிடைக்க நீதிபதிகளை ஏற்பாடு செய்யும் தரகர்களாகவும் வளர்ந்தனர்.  நீதிமன்றத்தில் தலை காட்டாமல், பல உயர்நீதிமன்ற நீதிபதிகளுடனும், சில ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடனும் இணைந்து கட்டப்பஞ்சாயத்து தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

Captureaa

உண்மையாகவே சட்டம் படித்து, தினசரி  நீதிமன்றத்தில் வாதாடும் வழக்றிஞர்கள், அனைவரும், இந்த போலி வக்கீல்களின் பண பலத்தையும், அதிகார பலத்தையும்,  நீதிபதிகளிடம் இவர்களுக்கு உள்ள செல்வாக்கையும் கண்டு அஞ்சுகின்றனர். தன்னை ஒரு சமூக ஆர்வலர், சட்டப் போராளி என்று பீற்றிக் கொள்ளும் சுதா ராமலிங்கம் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூட  இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குகிறோம் என்று வெளிப்படையாக, தொலைக்காட்சி நிகழச்சிகளில் கூறுகின்றனர்.

13THSUDHA_921979g

Advocate Sudha Ramalingam

இந்த போலி வழக்கறிஞர்களில் பலர், கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், நில அபகரிப்பு, கற்பழிப்பு போன்ற பலதரப்பட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆவர். சிலர் பலமுறையும், பலர் சில முறையும், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்கள். இன்னும் சிலர், குண்டர் சட்டத்தில் தமிழக சிறைகளிலே இருந்து கொண்டே, வேறு மாநில சட்ட கல்லூரிகளில், சட்ட வகுப்புகளில் ஆஜராகி, சட்ட கல்வி பயின்று, தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று, வக்கீல் பட்டம் பெற்றுள்ளதாக, போலி ஆவணங்களுடன் தமிழகத்தில் வழக்கறிஞர்களாக பணி புரிகிறார்கள். நீதிபதிகளைத் தவிர இவர்களுக்கென்று தனியாக ஒரு குற்ற சாம்ராஜ்யம் இருக்கிறது. ஓரிரு காட்பாதர்களும் இருக்கின்றனர். அவர்களைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையில் ஆராயலாம்.

Captureaaaa

சென்னை உயர்நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், சமீப காலமாக 4 பார்ப்பனிய நீதிபதிகள், அதாவது ராமசுப்பிரமணியம், பி.என்.பிரகாஷ், வைத்தியநாதன்,  மற்றும் தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் ஆகியோர் அடாவடி ஆளுமை செய்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் தயவுடன் ஒரு மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக வேண்டுமெனில் அதற்கான பாதையை சென்னை உயர்நீதிமன்றம் வழியாக மாற்றி அமைத்தனர். சம்பந்தப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற பார்ப்பனர்களின் ஆசியும் ஆதரவும் இருந்தால் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படுவர். அது மட்டுமில்லாமல் அடுத்த 30, 40, ஆண்டுகளுக்கு யார் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகவும், அதன் தலைமை நிதிபதியாகவும் வர வேண்டும் என்று வியூகம் வகுத்து, திட்டமிட்டு, காய் நகர்த்தும் சதி வேலைகளை சென்னையை சுற்றியிருக்கும் கிரிமினல்கள் செய்கின்றனர். ஆனால் இந்த தேசத்தின் மக்கு அரசியல்வாதிகளோ, இவ்வளவு பெரிய சதி வலை பின்னப்படுவதை உணராமலோ, அல்லது தடுக்க இயலாமலோ திணறி வருகின்றனர்.

இந்த மாற்றங்கள் அனைத்தும் சுமார் 1999-ம் ஆண்டு முதல் வெளிப்படையாக உணர முடிந்தது. 2004-ம் ஆண்டு சங்கரராமன் என்ற ஐயர் ஒருவர் காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

image0971

வழக்கை முறையாக விசாரிக்குமாறு தமிழக காவல் துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க உத்திரவிட்டார் அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள். இந்த கொலைக்கான காரணம் காஞ்சிபுரம் சங்கரமட  சங்கராச்சாரியர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரின் பெண்கள் தொடர்பான அந்தரங்கத்தை விமர்சித்து ஆதாரபூர்வமாக கடிதங்கள் வாயிலாக ஒரு மர்ம நபர் தொடர்ந்து தகவல்கள் வெளியிட்டதே ஆகும். யார் வெளியிடுகிறார்கள் என்று கூட அறியாமல் முதலில் ராதாகிருஷ்ண ஐயர் என்பவரை கொலை செய்ய முயன்றனர். பலத்த காயங்களுடன் ராதாகிருஷ்ண ஐயர் உயிர் பிழைக்க, மீண்டும் கடிதங்கள் வந்த பிறகுதான் உண்மையில் சங்கரராம ஐயர் என்பவர் தான் கடிதங்களை வெளியிட்டார் எனத் தெரிய வந்தது.

shankarraman murder 1

19b

20041203006100402

கோயில் மேலாளரான சங்கரராமன் ஏற்கனவே சங்கரமடத்தில் உயர்ந்த நிலையில் பணிபுரிந்து வந்ததால், மடத்தின் ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவராக இருந்தார். தவறுகளை தட்டி கேட்க துணிந்த சங்கரராம ஐயர், மடத்தில் உள்ள பலர் உதவியுடன் நிர்வாக ரீதியான கோப்புகளின் நகல்களையும், அந்தரங்க விஷயங்களின் விபரங்களையும் ஆதாரபூர்வமாக  சேகரித்தார். தன் மனைவி, மக்களுக்கே தெரியாமல் தன் சொந்த வீட்டில் அவற்றை பாதுகாத்து வந்தார். அந்த காலத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற வசதிகள் இல்லாததால் அவற்றை வெளியிட முடியாமல் போனது.

images (2)

இருந்த போதிலும் கடிதங்கள் வாயிலாக மடம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறைமுகமாகவும், நிர்வாக ரீதியாக அரசு அதிகாரிகளுக்கு நேரடியாகவும் புகார்கள் அனுப்பினார். “இறுதி எச்சரிக்கை” என்ற கடிதம் வெளியானதும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் உள்ளேயே கடவுளின் முன்னால் சங்கரராம ஐயரை வெட்டிக் கொலை செய்தனர், சங்கராச்சாரியர்களின் கூலிப்படையினர்.  மொத்தத்தில் காஞ்சி சங்கரமடம், மதத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது.

Scanefew0001Scanefew0002

சங்கரராம ஐயரின் கொலைக்கு பின், மக்களையும், சட்டத்தையும் ஏமாற்றுவதற்க்கும், தமிழக அரசை திசை திருப்புவதற்காகவும் ஜெயந்திர ஐயர், 5 போலி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் சரணடைய வைத்தார். ஆனால் 5ல் ஒருவன் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட அன்று, வேறு வழக்கில் சிறையில் இருந்ததால் காவல்துறைக்கு அவன் போலி குற்றவாளி என்ற சந்தேகம் வலுத்தது. இந்த லட்சணத்தில் தான் ஜெயந்திர ஐயர், நக்கீரன் வாரப்பத்திரிக்கையில் தன்னுடைய சீடர்கள் யாரேனும் சங்கரராம ஐயரை கொலை செய்து இருக்கலாம் என்று பேட்டி அளித்தார். மோப்பம் பிடித்த காவல்துறையினர், 11.11.04-ம் தேதி அன்று சுப்ரமணி என்கிற ஜெயேந்திர ஐயரை, ஐதராபாத் அருகே கைது செய்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். காவல்துறை விசாரனையின் போது அடம் பிடித்த சுப்பிரமணி ஐயர், காவல்துறையினருக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தவுடன்  ரகசியங்களை கக்கினார்.

இதை அறியாத பார்ப்பன எடுபிடிகள், இந்தியாவின் சட்டத்துறை வரலாற்றில், நடைபெறாத ஒரு நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். முறைப்படி கைது உத்தரவில் காவல்துறையினரும், மாஜிஸ்திரேட்டும் கையெப்பம் இடும் முன்னரே, நள்ளிரவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டின் கதவை தட்டி நீதிபதியை எழுப்பி, ஜாமீன் கோரினர். அரைதூக்கத்தில் இருந்த தலைமை நீதிபதி தீபாவளி என்று கூட பாராமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயேந்திர ஐயரின் ஜாமீன் மனுவை தீபாவளியன்றே விசாரிக்குமாறு, ஜாமீன் வழக்குகளை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உத்தவிட்டார். அதன்படி ஜாமீன் மனு மீதான  விசாரனை (12.11.04) (வெள்ளிக்கிழமை) தீபாவளியன்று துவங்கியது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு முன்னரோ, பின்னரோ சுமார் 200 ஆண்டுகளில் தீபாவளியன்று  எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டதில்லை.

Justice-Subhashan-Reddy

Chief Justice Subhashan Reddy

ஜெயேந்திர ஐயருக்கு உதவுவதாக நினைத்து கொண்டு முதல் நீதிமன்றமான மாவட்ட நீதிபதியைக்கூட புறந்தள்ளிவிட்டு, நேரடியாக உயர் நீதிமன்றத்திலேயே  ஒரு கொலை வழக்கின் ஜாமீன் மனுவை விசாரனைக்கு எடுத்துக் கொண்டதும், இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ அல்லது முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் கூட தங்கள் ஜாமீன் மனுக்களை நேரடியாக உயர்நீதிமன்றத்திலோ அல்லது விடுமுறை தினத்திலோ தாக்கல் செய்ய முடிந்ததில்லை. மேலும் அந்த மூவரும் கொலை வழக்குக்காக சிறையில் அடைக்கப்படவும் இல்லை, அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள், மரண தண்டனை குற்றங்களும் இல்லை.

இவ்வாறு சிறப்பாக உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற அமர்வு, 12.11.04 தீபாவளியன்று  தன் விசாரனையை துவக்கியது. விசாரணை  நீதிபதியையும் அரசு வழக்கறிஞரையும் நிர்ப்பந்திக்கும் நோக்கில், (உயர்நீதிமன்றத்தில் ஆஜராக அரசியல் சாசனத்தால் தடை செய்யப்பட்ட), ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் வழக்கறிஞர்கள் வரிசையில் அமர்ந்து குற்றவாளிக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தினார். அவரைக் கண்டு அஞ்சி நடுங்கிய தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அவரின் வருகை தன்னை அச்சுறுத்துகிறது, என்று நீதிமன்றத்திலேயே புகார் தெரிவித்தார்.

விசாரணை நீதிபதியான திரு.பாலசுப்பிரமணியன் கலகலப்பாக எல்லோருடனும் எளிதில் பழகக் கூடியவர்.  முதல்நாள் 12.11.04 (வெள்ளிக்கிழமை) அன்று, இந்த வழக்கும் அக்கால கஞ்சா/ஹெராயின் வழக்குகள் போன்ற புனையப்பட்ட வழக்கு என்ற தவறான அனுமானத்தில், ஜெயேந்திர ஐயரை சிறைக்கு பதிலாக, விருந்தினர் மாளிகை அல்லது கிரீன்வேஸ் சாலையில் காலியாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஏதோ ஒரு வீட்டிலோ, தங்க வைக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தினார்

அது மட்டுமல்லாமல், விசாரணையை அடுத்த நாள் 13.11.04 (சனிக்கிழமைக்கு) ஒத்தி வைத்தார் (மீண்டுமொரு விடுமுறை நாள்).  அன்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான  திரு.KTS துளசி  தமிழக அரசு சார்பாக ஆஜர் ஆகி உண்மை நிலவரத்தை எடுத்துரைத்த  பின்பு  ஆடிப் போன நீதிபதி பாலசுப்பிரமணியம், விசாரனையை 17.11.04 (புதன்கிழமை) ஒத்திவைத்தார். இந்த செய்தியைக் கேட்ட ஜெயேந்திர ஐயரின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்களை உருட்டுகட்டைகளாலும், கம்பிகளாலும் தாக்கினர்.

kts-tulsi

Advocate KTS.TULSI

17.11.04 முதல் 19.11.04 புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் உயர்நீதிமன்ற பெயில் கோர்ட்டில்  ஜெயேந்திர ஐயர் வழக்கு  மட்டுமே விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறையில் வாடும் மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. 20.11.04 (சனிக்கிழமை) ஜாமீன் மனுவை நீதிபதி பாலசுப்பிரமணியம் தள்ளுபடி செய்தார். இந்திய நீதித்துறை வரலாற்றில்  6 நாட்கள் முழுவதுமாக  (3 விடுமுறை நாட்கள் உட்பட) தொடர் விசாரனை நடை பெற்ற ஒரே ஒரு ஜாமீன் வழக்கு இந்த வழக்குதான். இந்தியாவின் வேறு எந்த உயர்நீதிமன்றத்திலும்,  இந்த அளவுக்கு நீதியை யாரும் வளைத்ததில்லை.

அடுத்த 5 நாட்களுக்குள் (26.11.04) மீண்டும் ஒரு ஜாமீன் மனுவை ஜெயேந்திர ஐயர் தாக்கல் செய்தார். ஒரே நாளில் பதில் மனுவை  அரசிடமிருந்து பெற்று, தொடர்ந்து இரண்டு நாட்கள் இதர வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு இந்த இரண்டாவது ஜாமீன் மனுவும் விசாரிக்கப்பட்டு, 30.11.04 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், போலீஸ் விசாரணையில், ஜெயேந்திர ஐயர் அனைத்து உண்மைகளையும் கக்கினார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் உள்ள பார்ப்பன லாபி கொடுத்த அழுத்தத்தில் குற்றவாளியிடம் கெஞ்சியும், கொஞ்சியும் விசாரித்தார் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் (தற்போதைய உளவுத் துறை ஜஜி).

11800389_885047221532357_5999494014589920370_n

IG (INTELLIGENCE) Davidson Devasirvatham

ஒரு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, விசாரணை அதிகாரிகள் முன் படுத்துக் கொண்டும், விசாரணை அதிகாரிகள் குற்றவாளி முன் தரையில் அமர்ந்து கொண்டும், விசாரிக்கப்பட்ட  ஒரே வழக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இது ஒன்று தான். அந்த விசாரணையின் லட்சணத்தை இந்த கானொளியில் காணுங்கள்.

குற்றவாளி – நீதிபதி உறவுகள் – தொடரும் ……

Share Button