JUDGE-R11.06.13 அன்று உடுமலைப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த உதவிப்பொறியாளர் முத்துகிருஷ்ணனை அணுகிய பாபு என்ற மோட்டார் மெக்கானிக் தனது புதிய பட்டறைக்காக (Workshop) 3 புதிய மின் இணைப்புகள் கோரி விண்ணப்பித்தார். நேர்மையான அதிகாரியான முத்துகிருஷ்ணன் அன்றே மதிப்பீட்டை தயாரித்து, ஒப்புதலுக்காக தனது மேலதிகாரியான உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பி வைத்தார்.24.06.13 அன்று உதவி செயற்பொறியாளரின் ஒப்புதல் கடிதம் கிடைத்தவுடன் மூன்று இணைப்புகளுக்கு மூன்று மீட்டர்களை பெற்றார்.

பாபுவின் கடையருகே மின்மாற்றி (Transformer) இல்லாததால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த 200Kva மின்மாற்றியை இட மாற்றம் செய்து 28.06.13ம் தேதி 3 புதிய மின் இணைப்புகளை பாபுவுக்கு முத்துகிருஷ்ணன் வழங்கினார். அதாவது நான்கே நாட்களில் மின்மாற்றி இல்லாத இடத்தில் மின் இணைப்பு வழங்கி தமிழக மின்வாரியத்தில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினார் முத்துகிருஷ்ணன்.

மூன்று இணைப்புகளையும் சோதனை செய்த உயர் அதிகாரிகள் அவற்றின் செயல்பாட்டினை மின்வாரிய பதிவேடுகளில் பதிவு செய்தனர்.

docu1

Electricity Board Service Connection Register

(Click on image to Enlarge)

மின்வாரிய மென்பொறியாளர்கள் இந்த விபரங்களை மின்வாரிய கணினியில் பதிவு செய்தனர்.

6

Online Bill Status

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பாபுவுக்கு மின் இணைப்பு கொடுத்த மறுநாளே, அதாவது 29.06.13 அன்று வேறு 8 பேருக்கு புதியதாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.

222

Electricity Board Service Connection Register

(Click on image to Enlarge)

5 நாட்கள் மின்சாரத்தை பயன்படுத்திய பாபு, 03.07.13 அன்று லஞ்ச ஒழிப்பு ஆய்வாளரிடம் ஒரு புகார் அளித்தார். ரூபாய் 8,500 லஞ்சம் கொடுத்தால் தான் தனக்கு மின் இணைப்பு வழங்க முடியும் என்று முத்துகிருஷ்ணன் கோருவதாகக்கூறி முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். புகாரின் பேரில் வழக்கு (FIR) பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் உடனடியாக முத்துகிருஷ்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

FIR_1FIR_2FIR page 3

ஜாமீனில் வெளியே வந்த முத்துகிருஷ்ணன், 28.06.13 அன்று வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு எப்படி 3.07.13 அன்று தான் லஞ்சம் கேட்க முடியும் என்று கேள்வி எழுப்பி, தன் மீது புனையப்பட்ட பொய் வழக்கை அபத்தமானது என்றும், நம்பத்தகாத வழக்கு என்றும் அறிவித்து, FIRஐ ரத்து செய்யுமாறு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு (WP 3491/2015) தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மாலா அவர்கள், 31.03.15 அன்று தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். அவரின் செயல்பாடுகள் சந்தேகமளிப்பதாக இருந்ததால், மறுநாளே (01.04.15) எழுத்துபூர்வமாக பதில் வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

06.04.15 அன்று நீதிபதி மாலா 20 பத்திகள் கொண்ட தீர்ப்பை வழங்கினார். அதில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை திரித்துக்கூறி இருந்ததால், அவை நீதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது. தவறுகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் உருமாற்றத்தைப்பற்றி விளக்கம் அளிக்காமல், குற்றத்தை மறைப்பதற்காக தந்திரமாக தனது தீர்ப்பில் 2 பத்திகளை நீக்கி (பத்தி எண் 16 மற்றும் 17) புதியதாக ஒரு தீர்ப்பை வெளியிட்டார். அது மட்டும் அல்லாமல் 3ம் பத்தியில் உள்ள “and perused the written arguments filed by the petitioner” என்ற சொற்களையும், 4ம் பத்தியில் உள்ள 2 உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் தலைப்பினையும் நீக்க உத்தரவிட்டார்.

இது குறித்து 17.04.15 அன்று முத்துகிருஷ்ணனுக்கு தீர்ப்பின் நகல் கிடைத்தவுடனே, தலைமை நீதிபதியிடம் எழுத்து பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.

7

இந்தப்புகாருக்கு நீதிபதி மாலாவின் பதில் என்ன தெரியுமா ? யாரிடம் புகார் அளித்தால் என்ன செய்ய முடியும் என்று எண்ணி, தலைமை நீதிபதியையும், தமிழக மக்களையும் ஏளனம் செய்யும் வகையில் இரண்டு தீர்ப்புகளையும் உயர்நீதிமன்ற இணையதளத்தில் பிரசுரிக்க உத்தரவிட்டுள்ளார்.

8

Madras high Court Webpage

முதல் தீர்ப்பும், புனையப்பட்ட தீர்ப்பும் கீழே வழங்கப்பட்டுள்ளன. வாசகர்கள் 3,4,16 மற்றும் 17 பத்திகளை கவனமாக பார்க்கவும்.

Share Button