gallery_201213_big 453_resize

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் அடிப்படை சம்பளம் 80 ஆயிரம் ரூபாய், அகவிலைப்படி 96 ஆயிரம், கைச்செலவுக்கு 12 ஆயிரம், வீட்டு வாடகை படி 24 ஆயிரம், 10 லட்சம் மதிப்புள்ள ஹோன்டா கார்,  மாதம் 10 ஆயிரம் ரூபாய் பெட்ரோல்/டீசல் (200 லிட்டர்),  வீட்டு அலங்கார பொருட்கள் 3 லட்சம் ரூபாய், ஆண்டுக்கு 10  ஆயிரம் யூனிட் மின்சாரம், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் (ஆண்டுக்கு 36 லட்சம் லிட்டர்), என்னற்ற கோடி ரூபாய்க்கு உள்/வெளிநாட்டு  மருத்துவ செலவு, தோட்டக்காரர் (gardener), வீட்டு வேலையாள் (House- keeping), மற்றும் கூலியாள் (mazdoor).

மொத்தமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மட்டுமே.

ஆனால் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு  மாத சம்பளம் ரூபாய் 27 ஆயிரம் மட்டுமே.

cm dcm and opp leader salary detail (1)

இப்படி முதல்வரை விட சுமார் ஒன்பது மடங்கு (இரண்டே கால் லட்சம் ரூபாய்) சம்பளமாக பெறும் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதியான சிவஞானம் (1st பெஞ்ச் சிவஞானம்), த/பெ சுப்பையா, மிகவும் கீழ்த்தரமான ஒரு மோசடியை செய்து மக்கள் வரிப் பணத்தை சுருட்டிக்  கொண்டிருக்கிறார். அதன் விபரம் பின் வருமாறு.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு தன் தந்தையின் பெயரில் இரண்டு மின்சார இணைப்புகளை வைத்துள்ளார்.

முதலாம் மின் இணைப்பின் எண் 09-262-003-546.

Court-4 (1)

இரண்டாம் மின் இணைப்பின் எண் 09-262-003-764

Court-1 (1)

இந்த இரட்டை இணைப்புகள் மூலம் சிவஞானம் மாதம் சுமார் 650/- ரூபாய் பண மோசடி செய்து வருகிறார். உதாரணமாக கீழே வெளியிடப்பட்டுள்ள அரசு பதிவேட்டில் ஜனவரி 2013-ல் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டுப்படி (இணைப்பு எண் 546) 1420 யூனிட் மின்சாரத்துக்கு ரூபாய் 7,130 மின் கட்டணமாக கட்டியுள்ளார். இணைப்பு எண் 764-ல் 410 யூனிட்க்கு 1060 ரூபாய் கட்டியுள்ளார்.

Court-3 (1)

ஆனால், டபுள் கனெக்ஷன் மோசடி இல்லாத பட்சத்தில் அந்த 410 யூனிட்களுக்கு ரூபாய் 5.75 என்ற விகிதத்தில் கணக்கீடு செய்தால் 2357.50 ரூபாய் கட்டியிருக்க வேண்டும். வெறும் 1060 ரூபாய் கட்டிய சிவஞானம் இந்த டபுள் கனெக்ஷன் மோசடி மூலம் 2013 ஜனவரி  மாதத்தில் மட்டும் ரூபாய் 1297.50 அரசு பணத்தை கையாடல் செய்துள்ளார்.

மேலும், கட்டணமாக செலுத்திய 1060 மற்றும் 7130 ரூபாயை, அரசிடம் கோரி  திரும்பப்பெற்றுக் கொண்டார்.

இவர் நீதிபதியாக பதவியேற்ற மார்ச் 2009ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 46,800 ரூபாய் இந்த டபுள் கனெக்ஷன் மோசடி மூலம்  விழுங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் 6 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் ரூபாய் மின் கட்டண தொகையை அரசிடமிருந்து திரும்ப பெற்றுள்ளார். இதற்கான வருமான வரி சுமார் ஒரு 1 லட்சம் ரூபாயை கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளார்.

Court-2 (1)

ஆண்டுக்கு 10 ஆயிரம் யூனிட் என்ற அளவை தாண்டி சராசரியாக 14 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதோடு அரசு ஊழியர்களின் உதவியோடு 14 ஆயிரம் யூனிட்களுக்கும் பணத்தை அரசிடமிருந்து சட்ட விரோதமாக கோரி பெற்றுள்ளார்.

Act 1 (2)

இதன்மூலம் ஏமாற்றிய சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை அசல் மற்றும் வட்டியுடன் வசூலிக்குமாறும், உடந்தையாக இருந்த அரசு (உயர்நீதிமன்றத்தில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு துறை) அதிகாரிகள் மீதும் ஒழுங்கு மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடமும், காவல்நிலைய உதவி ஆய்வாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

LR to Esplanade PS (5)

மேலும், டபுள் கனெக்ஷன் மோசடித்தொகையான ரூபாய் 46,800-ஐ மின் வாரியம் மீட்குமாறும், வரி ஏய்ப்பு செய்த  1 லட்சம் ரூபாயை வருமான வரித்துறை மீட்குமாறும் அந்தந்த துறைகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 அடுத்த இதழில் – வேறு ஒரு நீதிபதி – வேறு ஒரு மோசடி  !!!  

 

 

 

Share